கவிஞர் பா விஜய் இயக்கத்தில் நடிக்கும் பிரபுதேவா

Published By: Gayathri

09 Aug, 2021 | 12:11 PM
image

பாடலாசிரியரும் இயக்குனரும், நடிகருமான பா. விஜய் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக 'நடனப்புயல்' பிரபுதேவா நடிக்கிறார்.

நடன இயக்குனர், திரைப்பட இயக்குனர், நடிகர் என பன்முக திறமையுடன் உலாவரும் 'நடனப்புயல்' பிரபுதேவா, பாடலாசிரியரும், இயக்குனருமான பா. விஜய் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். 

இவருக்கு ஜோடியாக நடிகை மஹிமா நம்பியார் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் கலையரசன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தீபக் குமார் ஃபாதே ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, கணேசன் சேகர் இசையமைக்கிறார்.

படத்தை பற்றி இயக்குனர் பா. விஜய் பேசுகையில்,' உண்மை சம்பவத்தின் அடிப்படையில் தயாராகியிருக்கும் திரைக்கதை இது. 

கிரைம் திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்தப் படத்தில் ஹாரர் பட அம்சங்களும் இடம்பெற்றிருக்கிறது. 

பிரபுதேவா புதிய தோற்றத்தில் இப்படத்தில் நடிக்கிறார். நடிகை மஹிமா நம்பியார் கதையின் நாயகியாகவும், காட்டிலாகா அதிகாரியாகவும் நடித்திருக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு 50 சதம் அடர்ந்த வனப் பகுதிகளில் படமாக்கப்படவிருக்கிறது. மூன்று கட்டங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.  

சென்னையில் பிரம்மாண்டமாக பிரத்யேக அரங்கத்தை வடிவமைத்து அதில் படப்பிடிப்பு நடத்தப்படும். மூன்றாவது கட்டமாக வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது' என்றார்.

'ஸ்ட்ராபெர்ரி', 'ஆருத்ரா' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பா. விஜய் இயக்கத்தில் தயாராகும் இந்தப் படத்தை எம்.எஸ்.மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் புதுமுக தயாரிப்பாளர் கே. முருகன் தயாரிக்கிறார்.  இதன் தொடக்க விழா அண்மையில் சென்னையில் எளிமையாக நடைபெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37