சிறுவர்களுடன் சுற்றுலா சென்ற தனியார் கல்வி நிலையம் - சுகாதார பிரிவினர் விசாரணை

By T Yuwaraj

09 Aug, 2021 | 12:04 PM
image

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் வவுனியாவில் இருந்து நுவரெலியாவிற்கு சிறுவர்களை சுற்றுலா அழைத்து சென்ற தனியார் கல்வி நிலையம் தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சுற்றுலாத் தலங்கள் திறப்பு; ஊட்டி, கொடைக்கானலின் இயற்கை எழிலை ரசித்த மக்கள்  , தமிழ்நாடு செய்திகள் - தமிழ் முரசு Tamil Nadu News in Tamil, Tamil Murasu

நாடு முழுவதும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், தினசரி 90 க்கு மேற்பட்ட மரணங்களும் நிகழ்ந்த வண்ணமுள்ளது.

அத்துடன் மாகாணத்திற்கிடையிலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும், அத்தியாவசிய தேவை நிமிர்த்தம் மாத்திரம் பயணங்களை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஆரம்ப கல்வி பாடசாலையினர் சிறுவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் என 50 க்கு மேற்பட்டவர்களுடன் நுவரெலியா நோக்கி தனியார் பேரூந்தில் நேற்று (8.08.2021) அதிகாலை சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து நாடு அபாய கட்டத்தில் உள்ள நிலையில், பொறுப்பாக செயற்பட வேண்டியவர்கள் பொறுப்பற்ற விதமாக சுற்றுலாப் பயணத்திற்கு சிறுவர்களை அழைத்து சென்றுள்ளமை தொடர்பில் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் சுகாதாரப் பிரிவினருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த கல்வி நிலையத்தின் செயற்பாடு தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாணவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பை பெற்றோரிடமே வழங்க...

2022-11-30 15:56:37
news-image

ஒருநாள் சேவையின் கீழ் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டுகளின்...

2022-11-30 18:34:10
news-image

ஒரு குடும்பத்தின் ஆரோக்கியத்தை முழுமையாக இல்லாதொழித்துள்ள...

2022-11-30 16:31:06
news-image

முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி :...

2022-11-30 17:31:17
news-image

மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக்...

2022-11-30 16:55:29
news-image

யாழ். வர்த்தகர்கள் 12 பேருக்கு 3...

2022-11-30 17:21:40
news-image

தட்டிக்கழிக்கப்பட்டதை தொட்டுப் பார்க்கக்கூட தமிழர்கள் தயாரில்லை...

2022-11-30 16:25:40
news-image

யூடியூப்பை பார்த்து இராணுவத்தினரின் ஸ்னைப்பர் துப்பாக்கி...

2022-11-30 16:28:07
news-image

மக்களுக்காக எந்த மட்டத்திலும் அரசியல், தொழிற்சங்க...

2022-11-30 16:17:16
news-image

மட்டக்களப்பில் சுற்றுலாத் துறைக்காக காணிகளை அடையாளங்காண...

2022-11-30 16:18:11
news-image

மட்டக்களப்பில் அரச காணிகளை வனவள துறையிடமிருந்து...

2022-11-30 16:04:28
news-image

கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2022-11-30 16:11:22