(எம்.மனோசித்ரா)

அநுராதபுரத்தில் சாரதியை தாக்கி முச்சக்கர வண்டியைக் கொள்ளையிட்ட இரு சந்தேகநபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முச்சக்கரவண்டியொன்றில் ஏறிய இருநபர்கள் அதன் சாரதியிடம் குறிப்பிட்ட இடமொன்றுக்கு செல்ல வேண்டும் எனக் கூறி , செல்லும் வழியில் சாரதியைத் தாக்கி முச்சகரவண்டியைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் அநுராதபுரம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய கொள்ளையிடப்பட்ட முச்சக்கரவண்டியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவராவார். ஏனைய சந்தேநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.