அடுத்த ஆண்டும் வாகன இறக்குமதிக்கு தடை?

By Vishnu

09 Aug, 2021 | 11:08 AM
image

வாகன இறக்குமதிக்கான தற்காலிக தடையினை அடுத்த ஆண்டுக்கும் தொடர்வதற்கு அராசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாகன இறக்குமதிக்கான தடையின் மூலம் அரசாங்கத்தினால் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியினை சேகரிக்க முடிந்துள்ளதாக கருவூல திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால் அடுத்த ஆண்டும் வாகன இறக்கமதிக்கான தடையினை அரசாங்கம் தொடர்வதற்கு தீர்மானித்துள்ளதாக பெயர் குறிப்பிடாத அந்த அதிகாரியின் தகவல்களை மேற்கொள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்நிய செலாவணி மாற்று விகிதத்தில் உள்ள இடைவெளியைக் குறைக்கும் நோக்கில், 2020 மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தற்காலிக தடை விதித்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right