(எம்.மனோசித்ரா)
உடவலவ மற்றும் பரசங்கஸ்வௌ ஆகிய பிரதேசங்களில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை உடவலவ பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குகின்றார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் உடவலவ, கடுவலை, மாவனெல்ல மற்றும் ஹங்வெல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். உடவலவ பொலிஸாரால் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதே போன்று பரசங்கஸ்வெவ பிரதேசத்திலும் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 4 சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பில் பரசங்கஸ்வெவ பொலிஸாரால் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மாரவில பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கஞ்சா கலக்கப்பட்ட மருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
'மோதக' எனக்குறிப்பிடப்படும் இந்த மருந்தினை சட்டவிரோதமாக தன்வசம் வைத்திருந்த சந்தேகநபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM