வெடிபொருட்கள் திருடிய குற்றச்சாட்டில் கடற்படை, விமானப் படை உறுப்பினர்கள் உட்பட நால்வர் கைது

Published By: Vishnu

09 Aug, 2021 | 10:00 AM
image

வெலிசர விமானப்படை வெடிமருந்து சேமிப்பு நிலையத்திலிருந்து வெடி பொருட்கள் திருடப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நால்வர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு க‍ைதுசெய்யப்பட்ட நபர்களில் இலங்கை விமானப் படை மற்றும் கடற்படையைச் சேர்ந்த இருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருங்கல் குவாரிகளில் வெடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருட்களே நிலையத்தில் இருந்து திருடப்பட்டதாக இலங்கை விமானப்படையின் ஒழுங்கு பிரிவின் இயக்குநர் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன கூறினார்.

அதற்கமைவாக களனி குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் புலனாய்வு நடவடிக்கைகளின் பின்னர் கடற்படை மற்றும் விமானப் படையின் உறுப்பினர்கள் இருவரையும், இரு வெளிநாட்டவர்களையும் கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர்களிடம் 70 கிலோ கிராம் அம்மோனியம் நைட்ரேட் மற்றும் ஒரு முச்சக்கர வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் 100...

2025-12-11 01:30:52
news-image

எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசத்தின்...

2025-12-11 01:27:01
news-image

கைது செய்யப்பட்டவரை நீண்டகாலம் தடுத்து வைப்பது...

2025-12-11 01:22:45
news-image

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லாசி வேண்டி நாடளாவிய...

2025-12-10 23:51:41
news-image

30 க்கு மேற்பட்ட நீர் இறைக்கும்...

2025-12-10 23:42:06
news-image

ஆசிய அனர்த்த முன்னாயத்த நிலையத்திடமிருந்து இலங்கைக்கு...

2025-12-10 23:40:07
news-image

ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ...

2025-12-10 23:33:34
news-image

திருகோணமலை – மட்டக்களப்பு சாலையில் லொறியும்...

2025-12-10 23:27:28
news-image

கருணை மிகுந்த செயல் பெரும் நம்பிக்கையை...

2025-12-10 19:10:24
news-image

ஊழலற்ற அரச நிர்வாகத்தால் உலக நாடுகள்...

2025-12-10 18:59:59
news-image

இந்திய மீனவர் அத்துமீறல்  வடக்குமாகாண மீனவர்பிரச்சினைகள்...

2025-12-10 21:18:26
news-image

வடக்கு - கிழக்கு மலையகத்துக்கான புகையிரத...

2025-12-10 18:28:06