நிறைவுக்கு வந்த டோக்கியோ ஒலிம்பிக் : வெறுங்கையுடன் நாடு திரும்பும் இலங்கை - ஒருபார்வை !

08 Aug, 2021 | 09:36 PM
image

டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்

ஜப்­பானின் மிகப்­பெ­ரிய நக­ரமும் மின்­சார நகரம் என்றும் வர்­ணிக்­கப்­படும் டோக்­கி­யோவில் கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி வரை நடை­பெற்­று­வந்த 32ஆவது டோக்­கியோ ஒலிம்பிக் போட்டி விழா இன்று பிரம்­மாண்ட நிறைவு விழா­வுடன் முடி­வுக்கு வந்­தது.

 206 நாடு­களை சேர்ந்த ஒலிம்பிக் அணிகள், 11,326 வீரர்கள், 33 விளை­யாட்டில் 339 போட்­டிப்­பி­ரிவுகளில் , 16 நாட்கள் இந்த ஒலிம்பிக் நடந்து முடிந்­துள்­ளது. 

Photos: The 2020 Olympics in Tokyo

டோக்­கியோ ஒலிம்பிக் போட்­டியின் நிறைவு விழாவில் நேற்று இரவு ஜப்பான் ரேப்­பட்டி 8 மணி­ய­ளவில் ஆரம்­ப­மா­னது. வெற்று மைதா­னத்தில் நடை­பெற்ற நிறைவு விழா கலை­கட்­டி­யதா என்றால் இல்­லை­யென்றே சொல்ல ‍வேண்டும்.

நிறைவு விழாவின் தொடக்­கத்தில் வீரர்கள் மைதா­னத்­திற்குள் அணி வகுக்க ஜப்பான் நாட்­டி­ன் கலை நிகழ்ச்­சி­க­ளுடன் நிறைவு விழா ஆரம்­ப­மா­னது. 

அதன்­பி­றகு ஒலிம்பிக் கொடி இறக்­க­பட்டு அடுத்த ஒலிம்­பிக்கை நடத்தும் நக­ர­மான பிரான்ஸின் பாரிஸ் நகர மேய­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

Tokyo Olympics 2021 closing ceremony: Epic ending to games as Team GB land  65 medals - Mirror Online

சம்­பி­தா­ய­பூர்­வ­மன ஒலிம்பிக் நிறை­வு­ நிகழ்வுகளின் பின்னர் பேசிய சர்­வ­தேச ஒலிம்பிக் சங்­கத்தின் தலைவர் தோமஸ் பாக் வீரர்­க­ளுக்கு வாழ்த்­துக்­களை தெரி­வித்­த­தோடு ‍கொ‍ரோனாவுக்கு மத்தியில் ‍வெற்றிகரமான ஒலிம்பிக்‍கை நடத்தியமைக்கு ஜப்பான் நாட்­டுக்கும் நாட்டு மக்­க­ளுக்கும் வாழ்­த்துக்­க­ளையும் பாராட்­டுக்­க­ளையும் தெரி­வித்தார்.

அத்­தோடு கடந்த 16  நாட்­க­ளாக எரிந்­து­கொண்­டி­ருந்த ஒலிம்பிக் தீபம் அணைக்­கப்­பட்­ட­தோடு வானைப் பிழந்த பட்டாசுக்களுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் முடித்து வைக்கப்பட்டது.

கொரோனா தொற்று பரவல் கார­ண­மாக 2020 ஆம் ஆண்டு நடத்­தப்­பட வேண்­டிய ஒலிம்­பிக்கை ஓராண்டு ஒத்­தி­வைத்து இவ்­வாண்டு நட­த்­தப்­பட்­டது. 

ஆனாலும் இத­தற்கு டோக்­கியோ 2020 என்­றுதான் பெயர். நான்கு ஆண்­டு­க­ளுக்கு ஒரு­மு­றை­ நடை­பெறும் ஒலிம்பிக் போட்­டிகள் அடுத்த முறை முன்று வரு­டங்­களில் ‍அதா­வது 2024 ஆம் ஆண்டு பிரான்ஸ் தலை­நகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளது.  

Most Challenging" Tokyo Olympics Declared Closed | Olympics News

இதற்கு முன்­ன­தாக 1900 ஆம் ஆண்டு மற்றும் 1924 ஆம் ஆண்­டு­களில் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் நடத்­தப்­பட்­டுள்­ளது.

டோக்­கியோ ஒலிம்­பிக்கில் ஒட்­டு­மொத்­த­மாக 39 தங்கப் பதக்­கங்­களை வென்­றுள்ள அமெ­ரிக்கா 41 வெள்ளி, 33 வெண்­கலம் உட்­பட மொத்தம் 113 பதக்­கங்­களை வென்று பதக்கப் பட்­டி­யலில் முத­லி­டத்தைப் பிடித்­துள்­ளது.

ஆரம்பம் முதலே ஆதிக்கம் வெலுத்தி வந்த சினாவோ 38 தங்கப் பதக்­கங்கள், 32 வெள்ளி, 18 வெண்­கலம் என மொத்தம் 88 பதக்­கங்­க­ளுடன் இரண்­டா­வது இடத்தில் இருக்­கி­றது.

போட்­டியை நடத்­திய  ஜப்பான் 27 தங்­கப்­ப­தக்­கங்கள், 14 வெள்ளி மற்றும் 17 வெண்­க­லப்­ப­தக்­கங்­க­ளுடன் மூன்­றா­வது இடத்தில் உள்­ளது.

கடைசி தங்கம்

டோக்­கியோ ஒலிம்­பிக்கின் முத­லா­வது தங்­கப்­ப­தக்­கத்தை சீனா வென்­றதைப் போல டோக்­கியோ ஒலிம்ப்கின் கடைசி தங்­கப்­ப­தக்­க­மான 339ஆவது தங்கப் பக்­கத்தை செர்­பியா நாட்டின் ஆண்கள் போட்டர் போலோ அணி வென்­றது. 

கிரீஸ் நாட்­டுடன் நடை­பெற்ற இறுதிப் போட்­டியில் 13-10 புள்­ளிகள் அடிப்­ப­டையில் வென்ற செர்­பியா, கடைசி தங்­கப்­ப­தக்­கத்தை வென்ற நாடு என்ற பதிவைப் பதித்­தது.

நிலை­நாட்­டப்­பட்ட உலக சாத­னைகள்

பெண்கள் ட்ராக் சைக்கிள் பந்­தயம் - ஜேர்­மனி

ஆண்கள் ட்ராக் சைக்கிள் பந்­தயம் குழு: - இத்­தாலி

மகளிர் 200 மீற்றர் பிஸ்டோக் நீச்சல்:  - டட்­ஜானா ஷோன்­மேக்கர் (தென்­ன­பி­ரிக்கா) (2: 18.95 மீ)

ஆண்கள் 100 மீற்றர் பட்­டர்­பிளை நீச்சல் போட்டி: கேலெப் டிரஸ்ஸல் -– அமெ­ரிக்கா (49.45 வினா­டிகள்)

ஆண்கள் 4 × 100 மீற்றர் மெட்லி ரிலே: - அமெ­ரிக்கா (3: 26.78 மீ)

ஆண்­க­ளுக்­கான பளூ தூக்கல் -: லாஷா தலா­காட்சே – ஜோர்­ஜியா (488 கிலோ)

பெண்கள் 4 × 100 மீற்றர் ப்ரீஸ்டைல் நீச்சல் -: அவுஸ்­தி­ரே­லியா (3: 29.69)

மகளிர் முப்­பாய்ச்சல் -: யூலிமர் ரோஜாஸ் – வெனி­சுலா (15.67 மீட்டர்)

400 மீற்றர் தடை­தாண்டல் ஒட்டம்-: கார்ஸ்டன் வார்ஹோல்ம் – நோர்வே (45.94 வினா­டிகள்)

மகளிர் உள்ளக சைக்கில் ஓட்டம்: - சீனா (31.804 வினா­டிகள்)

பெண்கள் 4x200 மீற்றர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் -: சீனா (7: 40.33 நிமி­டங்கள்)

73 கிலோ பிரிவில் ஆண்கள் பளு­தூக்கல் :- ஷி ஜியாங் – சீனா

மகளிர் 400 மீற்றர் தடை தாண்டல் ஓட்டம்: சிட்னி மெக்­லாஹ்லின் – அமெ­ரிக்கா (51.46 வினா­டிகள்)

ஆண்­க­ளுக்­கான 1500 மீற்றர் ஓட்டம்: ‍ஜேகோப் இங்க்­பி­ரிட்சன் – நோர்வே (3 நிமிடம் 28.32 வினாடி)

மக­ளி­ருக்­கான 1500 மீற்றர் ஓட்டம்-: ஃபெய்த் கிபி­யாகோன் –- கென்யா (3 நிமிடம் 53.11 வினாடி)

குழு நிலைப் போட்டிப் பிரி­வு­களில்  முதல் மூன்று இடங்­களைப் பெற்ற நாடுகள் (ஆண். பெண் இரு பிரி­வு­க­ளிலும் )

மல்­யுத்தம்

ஆண்கள்: ஆர்.ஓ.சி., அமெ­ரிக்கா, கியூபா

பெண்கள்: ஜப்பான், அமெ­ரிக்கா, ஜேர்­மனி

அம்­பெய்தல்

ஆண்கள்: ஆர்.ஓ.சி., துருக்கி, இத்­தாலி

பெண்கள்: கொரியா, ஆர்.ஓ.சி., இத்­தாலி

ஜிம்­னாஸ்டிக்

ஆண்கள்: சீனா, ஜப்பான், ஆர்.ஓ.சி.

பெண்கள்: அமெ­ரிக்கா, ஆர்.ஓ.சி., சீனா

தட­களம்

ஆண்கள்: இத்­தாலி, அமெிக்கா, கென்யா

பெண்கள்: அமெ­ரிக்கா, ஜமைக்கா, கென்யா

குத்­துச்­சண்டை

ஆண்கள்: கியூபா, பிரித்­தா­னியா, ஆர்.ஓ.சி.

பெண்கள்: துருக்கி, பிரித்­தா­னியா, ஜப்பான்

சைக்­கி­ளோ­ட்டம்

ஆண்கள்: நெதர்­லாந்து, சுலோ­வே­னியா, ஆஸ­தி­ரியா

பெண்கள்: நெர்­லாந்து, ஆஸ்­தி­ரியா, சுவிட்­ஸர்­லாந்து

குதி­ரை­யேற்றம்

ஜேர்­மனி, பிரித்­தா­னியா,சுவிடன்

வாள் சண்டை

ஆண்கள்: ஆர்.ஓ.சி., பிரான்ஸ், கொரியா

பெண்கள்: ஆர்.ஓ.சி., எஸ்­டோ­னிய, அமெ­ரிக்கா

கால்­பந்­தாட்டம்

ஆண்கள்: பிரேசில், ஸ்பெய்ன், மெக்­சிகோ

பெண்கள்: கனடா, சுவிடன், அமெ­ரிக்கா

கோல்ப்

ஆண்கள்: அமெ­ரிக்கா, சுலோ­வே­னியா, சைனிஸ்­தாய்பே

பெண்கள்: அமெ­ரிக்கா, ஜப்பான், நியூ­ஸி.

ஹொக்கி

ஆண்கள்: பெல்­ஜியம், ஆஸி., இந்­தியா

பெண்கள்: நெதர்­லாந்து, ஆர்­ஜன்­டீனா, பிரித்­தா­னியா

ஜூடோ

ஆண்கள்: ஜப்பான், ஜோர்­ஜியா, செக்.குடி­ய­ரசு

பெண்கள்: ஜப்பான், கொசோவா, பிரான்ஸ்

கராட்டி

ஆண்கள்: ஜப்பான், இத்­தாலி, பிரான்ஸ்

பெண்கள்: எகிப்து, ஸ்பெய்ன், பல்­கே­ரியா

நீச்சல் மரத்தன்

ஆண்கள்: ஜேர்­மனி, ஹங்­கேரி, இத்­தாலி

பெண்கள்: பிரேசில், நெதர்­லாந்து, ஆஸி.

றக்பி 7

ஆண்கள்: பிஜி, நியூ­ஸி­லாந்து, ஆர்­ஜன்­டீனா

பெண்கள்: நியூ­லாந்து, பிரான்ஸ், பிஜி

துப்­பாக்கி சுடுதல்

ஆண்கள்: அமெ­ரிக்கா, சீனா, செக்.குடி­ய­ரசு

பெண்கள்: ஆர்.ஓ.சி, அமெ­ரிக்கா, சீனா

நீச்சல்

ஆண்கள்: அமெ­ரிக்கா, பிரித்­தானி, ஆர்.ஓ.சி.

பெண்கள்: ஆஸி., அமெ­ரிக்கா, சீனா

மேசைப்­பந்து

ஆண்கள்: சீனா, ஜேர்­மனி, ஜப்பான்

பெண்கள்: சீனா, ஜப்பான், ஹொங்கொங்

டென்னிஸ்

ஆண்கள்: குரோ­ஷியா, ஜேர்­மனி, ஆர்.ஓ.சி

பெண்கள்: செக்.குடி­ய­ரசு, சுவிட்­ஸர்­லாந்து, பிரேசில்

கரப்பந்தாட்டம்

ஆண்கள்: பிரான்ஸ், ஆர்.ஓ.சி., ஆர்ஜன்டீனா

பெண்கள்: அமெரிக்கா, பிரேசில், சேர்பியா

பளுதூக்கல்

ஆண்கள்: சீனா, ஜோர்ஜயா, கட்டார்

பெண்கள்: சீனா, ஈக்வடோர், சைனிஸ் தாய்பே

வெறுங்­கை­யுடன் நாடு திரும்­பிய இலங்கை

டோக்­கியோ ஒலிம்பிக் போட்­டியில் இலங்­கை­யி­லி­ருந்து ஒன்­பது வீரர்கள் 7 போட்டிப் பிரி­வு­களில் பங்­கேற்­றி­ருந்­தனர். 

ஆனால் இதில் ஒருவர் கூட அடுத்த சுற்­றுக்கு முன்­னே­ற­வில்லை என்­பதே சோகம். ஆக இலங்கை அணி வெஙை்­கை­யுடன் நாடு திரும்­பி­யது.

இந்­தி­யாவுக்கு ஒரு தங்கம்

ஒலி­ம­பிக்கில் பங்­கேற்ற இரண்­டா­வது மிகப்­பெ­ரிய சனத்­தொகை கொண்ட நாடானா இந்­தியா இந்த ஒலிம்­பிக்கில் ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்­கலப் பதக்­கத்தை வென்­றது. இந்­தியா இந்த பட்­டி­யலில் 48 ஆவது இடத்தைப் பிடித்­துள்­ளது.

ஒட்டு‍மொத்த உலகமும் கொரோனாவால் பிடித்திருக்கும் நிலையில் நடத்தப்பட்ட ஒலிம்பிக் வெற்றி பெற்றதா என்பதை வரலாறு தீர்மானிக்கும்.  ஆனால் வியைாட்டு உலகின் மகத்துவத்தை டோக்கியோ ஒலிம்பிக் எடுத்துக் காட்டியுள்ளது என்பது திண்ணம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11
news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20