ஜப்பானின் யொக்கோஹாமா, நிசன் விளையாட்டரங்கில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியின் மேலதிக நேரத்தில் போடப்பட்ட கோலின் உதவியுடன் ஸ்பெய்னை 2 - 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்ட பிரேஸில், ஒலிம்பிக் ஆண்கள் கால்பந்தாட்ட சம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டது.


மாற்று வீரராக களம்புகுந்த மெல்கம், மேலதிக நேரத்தின் 108ஆவது நிமிடத்தில் புகுத்திய கோல் பிரேஸிலுக்கு தங்கப் பதக்கத்தை வென்றுகொடுத்தது.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் ரியோ 2016 ஒலிம்பிக் ஆண்கள் கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் பெனல்டி முறையில் ஜெர்மனியை பிரேஸில் வெற்றிகொண்டு தங்கப் பதக்கத்தை சுவீகரித்திருந்தது.