ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்

Published By: Gayathri

09 Aug, 2021 | 01:38 PM
image

இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்‌ஷா வழிபாட்டு தளத்தில் கடந்த மே மாதம் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாலஸ்தீனர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்

பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. 

இதனை தொடர்ந்து இஸ்ரேல் விமானப்படை காசா முனை பகுதியில் தாக்குதல் நடத்தி ஹமாஸ் அமைப்பின் முக்கிய இடங்களை தகர்த்தது. 

இருதரப்புக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பல்வேறு கட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் நேற்று காசா பகுதியிலிருந்து பலூன்கள் மூலம் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதற்குப் பதிலடியாக, அந்தப் பகுதியிலுள்ள ஹமாஸ் அமைப்பின் நிலைகள் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் நடத்தியது.

இதுகுறித்து இஸ்ரேல் இராணுவம் கூறுகையில், ஹமாஸ் இராணுவ வளாகம் ஒன்றிலும் அவா்களது ஏவுகணை குண்டுவீச்சு தளத்திலும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தது. 

எனினும், இந்தத் தாக்குதலில் உயிசர்ச் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. இதுகுறித்து ஹமாஸ் தரப்பிலிருந்தும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அடுத்த அதிரடி! - அமெரிக்க கல்வித்...

2025-03-21 14:37:02
news-image

அருகில் உள்ள துணைமின்நிலையத்தில் தீ -...

2025-03-21 13:03:24
news-image

ஆயிரம் சைபர் டிரக் கார்களைத் திரும்பப்...

2025-03-21 13:15:48
news-image

இஸ்ரேலின் விமானதாக்குதலில் பெற்றோர்கள் பலி- காசாவின்...

2025-03-21 11:02:57
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் கர்ப்பிணிபெண்ணொருவரும் பலி

2025-03-20 17:23:18
news-image

பாலஸ்தீன ஆதரவு மாணவர்களிற்கு எதிரான டிரம்ப்...

2025-03-20 13:53:10
news-image

இந்தியாவில் பஞ்சாப் எல்லையில் ஒரு வருடத்திற்கு...

2025-03-20 12:39:09
news-image

உக்ரைனின் மின்நிலையங்கள் அணுஉலைகளை அமெரிக்கா நிர்வகிக்க...

2025-03-20 11:26:42
news-image

அமெரிக்காவில் சிஐஏ தலைமையகத்திற்கு வெளியே நபர்...

2025-03-19 21:20:40
news-image

டிரம்பிற்கு வழங்கிய வாக்குறுதியை ஒரு சில...

2025-03-19 15:06:57
news-image

அமெரிக்காவில் அரசியலுக்காக மக்கள் இலக்குவைக்கப்படும் நிலை...

2025-03-19 13:37:46
news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10