20 ஆவது திருத்தத்தை ஆதரித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை மன்னிக்கவுள்ளோம்: ஹக்கீம்

By J.G.Stephan

08 Aug, 2021 | 04:17 PM
image

(எம்.மனோசித்ரா)
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மன்னிப்பு கோரியுள்ளமையால், அவர்களை மன்னிக்க தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்  கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

இவ்விடயம் தொடர்பில் அரசியல் உச்சபீடம் ஏற்கனவே தீர்மானித்து விட்டது. அவர்கள் மன்னிப்பு கோரியுள்ளதால் மன்னிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த விவகாரம் நிறைவடைந்துவிட்டது. அவர்களுடைய வேறு திறமைகளைக் கருத்திற் கொண்டு கட்சியை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டிய தேவை எமக்கிருக்கிறது.

அதற்கான பொறுப்புக்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை அவர்கள் சிறப்பாக செய்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் பொதுநிகழ்வில் கோட்டாபய

2023-01-27 07:31:21
news-image

தெகிவளை விபத்தில் இளைஞர் பலி

2023-01-27 07:19:20
news-image

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுவிட்டு அமெரிக்க திரும்பிய...

2023-01-27 07:16:39
news-image

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பொதுநலவாய அமைப்பின்...

2023-01-26 13:18:06
news-image

தென் கொரிய தூதுவர் - அமைச்சர்...

2023-01-26 22:06:56
news-image

தேர்தல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில்...

2023-01-26 16:36:14
news-image

தேர்தலுக்கு தயாரில்லை என்பதை ஜனாதிபதி மக்களுக்கு...

2023-01-26 11:37:42
news-image

வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பம் !

2023-01-26 14:18:06
news-image

வரலாற்று சிறப்புமிக்க குசனார்மலைக்கு சாணக்கியனின் அழைப்பில்...

2023-01-26 17:30:34
news-image

புதிய வரி அறவீட்டு முறைக்கு எதிர்ப்பு...

2023-01-26 22:07:49
news-image

இலங்கையின் வளர்ச்சியில் பிரதான பங்காளியாக இந்தியா...

2023-01-26 16:24:24
news-image

படகில் 49 கிலோ கஞ்சா கடத்திய...

2023-01-26 16:05:57