பங்களாதேசத்திற்கு எதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில்  அவுஸ்திரேலியா அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலிய  கிரிக்கெட் அணி பங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் 5 இருபதுக்கு 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

முதல் 3 போட்டிகளில் பங்காளதேஷ் அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், 4ஆவது 20 ஓவர் போட்டி நேற்று டாக்காவில் நடைபெற்றது. 

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்த பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 104 ஓட்டங்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக நயீம் 28 ஓட்டங்களை எடுத்தார்.

இதனையடுத்து, 105  ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  அவுஸ்திரேலியா அணி 19 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 105 ஓட்டங்களை எடுத்து  3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.

இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி இருபதுக்கு 20 போட்டி வரும்  நாளை மாலை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.