(எம்.மனோசித்ரா)
கம்பஹா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட  சுற்றிவளைப்பில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் பூகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, அவர் குறித்த பிரதேசத்தில் கஞ்சா வர்த்தகத்தில் ஈடுபடுபவர் என்று தெரியவந்துள்ளது.

இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகை யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபருக்கு கஞ்சா தொகையை வழங்கிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஏனைய இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கம்ஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.