ஜப்பானின் சப்போரோ நகரில் இன்று காலை நடைபெற்ற டோக்கியோ 2020 ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான மரதன் போட்டியில் விளையாட்டு வீரருக்கே உரிய ஆற்றல்களை வெளிப்படுத்தி விடாமுயற்சியுடன் ஓடிய கென்யாவின் எலியுட் கிப்சோகோ வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார்.
ஐந்து வருடங்களுக்கு முன்னர் ரியோ 2016 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலும் கிப்கோகே வெற்றியீட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்திருந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் கடைசி நிகழ்ச்சியாக ஜப்பான் நேரப்படி இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமான ஆண்களுக்கு மரதன் போட்டியில் மிக அற்புதமாக ஓடிய கிப்சோகே சிரமமின்றி வெற்றிபெற்றார்.
தனது நான்காவது ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றிய கென்ய வீரர் கிப்சோகே, சப்போரோ பார்க் முடிவுக்கோட்டை 2 மணித்தியாலங்கள், 08 நிமிடங்கள், 38 செக்கன்களில் கடந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
ரியோ ஒலிம்பிக்கில் அவர் எடுத்துக்கொண்ட நேரத்தை விட டோக்கியோவில் கிப்சோகே குறைந்த நேரத்தைப் பதிவு செய்து வெற்றியீட்டினார்.
'இம்முறை வெற்றியீட்டியது மிகவும் விசேடமாகும். ஏனெனில் டோக்கியோ ஒலிம்பிக் ஒரு வருடத்தால் பிற்போடப்பட்டதால் இந்தப் போட்டி கடுமையாக இருந்தது. எவ்வாறாயினும் ஏற்பாட்டாளர்கள் இப்போட்டியை நடத்தியதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். உலகம் சரியான திசையில் நோக்கி நகரும் அடையாளத்தை இது எடுத்துக்காட்டுகின்றது. அத்துடன் வழமையான வாழ்க்கைக்கு திரும்புவதற்கான எழுச்சியில் உள்ளோம்' என வெற்றியின் பின்னர் கிப்சோகே தெரிவித்தார்.
டோக்கியோ 2020 ஒலிம்பிக் மரதன் போட்டியில் நெதர்லாந்து வீரர் ஆப்தி நஜியே (2:09:58) வெள்ளிப் பதக்கத்தையும் பெல்ஜியம் வீரர் பஷீர் ஆப்தி (2:10:00) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
- (என்.வீ.ஏ.) -
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM