களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு சந்திப்பிலாவடி வீதியில் அமைந்துள்ள சவுக்கு தோட்டத்தில் ஆண் ஒருவரின் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.தொடர்ந்து பொலிசார் மற்றும் கிராம சேவகர் இணைந்து குறித்த நபரினை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது குறித்த நபர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. குறித்த மரணம் தொடர்பான விசாரணையினை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.