திருகோணமலை பகுதியில் வைத்து காணாமல் போனதாக கூறப்படும்  பண்டாரகம வர்த்தகரை  எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வர்த்தகர்  நேற்று (06) கைதுசெய்யப்பட்ட நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தகர்  நேற்றைய தினம்  ஹப்புத்தளை ஹல்துமுல்லையில் வைத்து மறைந்திருந்த போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தகர்  நண்பர் ஒருவருக்கு எடுத்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டதன் அடிப்படையில் இவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.