அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணிக்கெதிராக பங்களாதேஷ் அணி முதல் முறையாக இருபதுக்கு 20 தொடரொன்றை வென்றுள்ளது.
டாக்கா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமதுல்லா 52 ஓட்டங்களையும் சகிப் அல் ஹசன் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்ரேலியா அணியின் பந்துவீச்சில், நாதன் எலீஸ் 3 விக்கெட்டுகளையும் ஹசில்வுட் மற்றும் ஸெம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 128 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 117 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் பங்களாதேஷ் அணி 10 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ள பங்களாதேஷ் அணி, தொடரையும் வென்றுள்ளது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, அவுஸ்ரேலியா அணிக்கெதிராக இருபதுக்கு 20 தொடரை வெல்வது இதுவே முதல்முறையாகும்.
அத்துடன் தொடர்ச்சியாக அவுஸ்ரேலியா அணிக்கெதிராக மூன்று போட்டிகளில் வெற்றிபெறுவதும் இதுவே முதல் முறை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM