400 மீற்றர் அஞ்சல் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்று இத்தாலி வரலாற்று சாதனை

By Digital Desk 2

07 Aug, 2021 | 09:30 PM
image

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் இத்தாலி அணியினர் தங்கப்பதக்கத்தை வென்று வரலாற்று சாதனைப்படைத்துள்ளனர்.

அவர்கள் பந்தய தூரத்தை 37.50 செக்கன்களில் ஓடி முடித்தனர்.

இதேவேளை ஒரு செக்கன் வித்தியசாத்தில் பிரித்தானியா அணியினர் 2 ஆவது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினர்.

கனடா அணியினர் மூன்றாவது இடத்தை பெற்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினர்.

இதேவேளை பெண்களுக்கான 400 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் ஜமேக்கா அணியினர் தங்கப்பதக்கத்தை வென்று சாதனைப் படைத்தனர்.

அவர்கள் பந்தய தூரத்தை 41.02 செக்கன்களில் ஓடி முடித்தனர்.

இதேவேளை இப்போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்ற அமெரிக்க அணியினர் வெள்ளிப்பதக்கத்தையும் மூன்றாம் இடத்தை பெற்ற பிரித்தானியா அணியினர் வெங்கலப்பத்தையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right