வெள்ளை வேன் கலாசாரத்தை மீண்டும் ஆரம்பித்து, ஜெனிவா நெருக்கடிக்கு முகங்கொடுக்க தயாராக வேண்டாம்..!

By J.G.Stephan

07 Aug, 2021 | 02:11 PM
image

(எம்.மனோசித்ரா)
அதிபர் - ஆசிரியர்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், பல்கலைக்கழக மாணவர்கள் சுதந்திர கல்வியை பாதுகாப்பதற்காகவும் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்களை அடக்குமுறை ஊடாக முடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. சிவில் உடையில் பொலிஸாரை அனுப்பி மாணவர்களை கைது செய்யும் வெள்ளை வேன் கலாசாரத்தை மீண்டும் ஆரம்பித்து செப்டெம்பரில் பாரதூரமான ஜெனிவா நெருக்கடிக்கு முகங்கொடுக்க தயாராக வேண்டாம் என்று அரசாங்கத்தை எச்சரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், அரசாங்கத்தின் தொடர்ச்சியான அடக்குமுறைகள் எதிர்காலத்தில் அதற்கு எதிராகவே அமையும். ஜே.ஆர்.ஜயவர்த்தனவினுடைய ஆட்சியில் இதே போன்று அவருக்கு எதிராக பாரிய மாணவர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மாணவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தியும், வடகொழும்பு மருத்துவ வித்தியாலயத்தை நீக்குமாறும் வலியுறுத்தியும் அந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச  மனித உரிமைகள் அமைப்புக்களின் அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கும். எனவே கைது செய்யப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் சகலருக்கு எதிரான வழக்குகளையும் இரத்து செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்

2022-09-27 08:59:44
news-image

சீன கம்யுனிஸ்ட் கட்சியின் மாநாட்டின் பின்னர்...

2022-09-27 08:41:02
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்து அமைச்சர் மனுஷ...

2022-09-26 21:29:12
news-image

மஹிந்த தலைமையில் புதிய அரசியல் கூட்டணி...

2022-09-26 18:39:29
news-image

இலங்கை அரசாங்கத்தின் போக்கை அடக்குமுறைகள் மீளுறுதிப்படுத்துகின்றன...

2022-09-26 21:10:02
news-image

'அதியுயர் பாதுகாப்பு வலய' உத்தரவு சட்டத்திற்கும்...

2022-09-26 20:54:52
news-image

சட்டத்தின் பிரகாரமே ஆர்ப்பாட்டங்கள் கலைக்கப்படுகின்றன -...

2022-09-26 18:48:01
news-image

சிறுவர் நலனை முன்னிறுத்திய நடவடிக்கைகளுக்கு முழுமையான...

2022-09-26 21:24:17
news-image

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு பிரிட்டன்...

2022-09-26 18:44:11
news-image

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருடம்...

2022-09-26 18:51:48
news-image

புதிய அரசியல் கூட்டணியில் ஆட்சியை கைப்பற்றுவோம்...

2022-09-26 21:04:25
news-image

பிறந்து 7 நாட்களேயான கைக்குழந்தையை 50,000...

2022-09-26 21:54:09