மனித நுகர்வுக்கு உதவாத 2000 கிலோ கோழி இறைச்சி எரித்தழிப்பு..!

Published By: Digital Desk 8

07 Aug, 2021 | 01:57 PM
image

குளிர்பதன் வெப்பநிலை, போதுமானளவு இல்லாமல் கொண்டுசெல்லப்பட்ட 2000 கிலோகிராம் கோழிஇறைச்சி நேற்று எரித்தழிக்கப்பட்டதாக வவுனியா தெற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

வடபகுதியில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட குறித்த இறைச்சி ஏற்றிய வாகனத்தினை வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் நேற்று (06.08.2021) சோதனைக்குட்படுத்திய வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த வாகனத்தில் போதியளவு குளிரூட்டி இன்மையால் இறைச்சி பழுதடைந்த நிலையில் காணப்பட்டதையடுத்து, அவற்றை கைப்பற்றி நீதிமன்றத்தில் குறித்த பொருட்களை ஒப்படைத்துள்ளனர்.  

கைப்பற்றப்பட்ட சுமார் 2,000 கிலோகிராம் கோழி இறைச்சியை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர், குறித்த இறைச்சி பாவனைக்கு உதவாது என நீதிமன்றத்தினால் உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, சுகாதார பரிசோதகர்களால் நேற்றையதினம் மாலை வவுனியா பாவற்குளம் மக்கள் குடிமனைகள் இல்லாத  பகுதியில் உள்ள பொது இடத்தில் கோழி இறைச்சி தீ வைத்து எரித்தழிக்கப்பட்டது. 

வவுனியா தெற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொக்கட்டிச்சோலையில் இருந்து வாவி ஊடாக ஆரையம்பதிக்கு...

2026-07-10 22:03:37
news-image

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், வெலிக்கடை சிறைச்சாலையின்...

2026-07-10 18:40:05
news-image

வடக்கில் இராணுவக் குறைப்பு மற்றும் பலாலி...

2026-07-10 18:38:06
news-image

தித்வா அனர்த்த நிதி திறைசேரியில் பாதுகாப்பாக...

2026-07-10 16:11:37
news-image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கௌரவத்தையும் உயர்த்துவதே அரசின்...

2026-07-10 20:53:55
news-image

ஒற்றையாட்சி, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு வார்த்தையின்...

2026-07-10 14:30:42
news-image

சிறைச்சாலை வன்முறைகளைத் தடுத்திருக்க முடியும் ;...

2026-07-10 13:21:14
news-image

பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இலங்கையின்...

2026-07-10 13:11:19
news-image

குழந்தை பிறப்பை அதிகரிக்க ஊக்கத்தொகை: நாடாளுமன்றத்தில்...

2026-07-10 16:01:53
news-image

துறைமுக நகர ஆணைக்குழுவுக்கு அதிக சம்பளம்;...

2026-07-10 14:45:23
news-image

கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உடனடி...

2026-07-10 14:31:38
news-image

கிழக்கு புகையிரத பிரச்சினைகளுக்கு நேரடி கள...

2026-07-10 15:31:04