(எம்.மனோசித்ரா)
வீசா இன்றி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருக்கின்றமை தொடர்பில் கைது செய்யப்படுபவர்கள் தடுத்து வைக்கப்படும் மத்திய நிலையத்தில் இந்திய பெண்ணொருவரை தாக்கியமை தொடர்பில் மடகஸ்கார் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

வீசா இன்றி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருக்கின்றமை தொடர்பில் கைது செய்யப்படும் நபர்களை தடுத்து வைப்பதற்கான மத்திய நிலையமொன்று மிரிஹாண பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மத்திய நிலையம் குடிவரவு - குடியகழ்வு நிர்வாகியின் கண்காணிப்பின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இந்த மத்திய நிலையத்திலிலுள்ள 26 வயதுடைய இந்திய பெண்ணொருவரை தாக்கியமை தொடர்பில் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள 29 வயதுடைய மடகஸ்கார் பிரஜையான பெண்ணொருவர் மிரிஹாண பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.