கார்களை ஏற்றிச் சென்ற டிரக் வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளான சம்பவமொன்று தென் சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் உள்ள பகுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான டிரக் வண்டியின் முன்பகுதி சுமார் 150 மீற்றர் உயரத்தில் அந்தரத்தில் தொங்குவது பார்ப்பவர்களை மயிர்ச் கூச்செறிய வைக்கின்றது.

குறித்த விபத்தில் எவருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை. எனினும் டிரக் வண்டியில் உள்ள வாகனங்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.