(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டின் இயற்கையையும் இயற்கைகளை வளங்களையும் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும் என்பதுடன், காடழித்தல், மணல் கொள்ளையென இயற்கையை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கையெடுக்கப்படுமென சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துசார இந்துனில், இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் பதிலளிக்கையில்,
சுற்றாடலை பாதுகாக்க ஓர் அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.
கடந்தகாலத்தில் காடழித்தல் மற்றும் மணல் அகழ்த்தல் போன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாதிருந்தமையை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், தற்போது அந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளோம்.
அரசியல் கட்சிகள், அரசியல் அதிகாரம் மற்றும் ஏனைய தராதரங்களை பாராது இந்நடவடிக்கைகளுக்கு எதிராக நீதியை நிலைநாட்டும் அதிகாரம் எமக்கு கிடைக்கப்பெற்றதால் இவ்வாறான அழிவுகளை ஏற்படுத்தியவர்களை சட்டத்தின்முன் நிறுத்தியுள்ளோம்.
பலருக்கு தண்டனைகளையும் பெற்றுக்கொடுத்துள்ளோம். மணல் அகழும் செயற்பாடுகளும் மணல் வெட்டும் நடவடிக்கைகளும் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
எதிர்காலத்திலும் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதுடன், நாட்டின் இயற்கை மற்றும் இயற்கை வளத்தை பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM