தடுப்பூசி செலுத்தாவிட்டால், கையடக்கத்தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படும்: அதிரடி அறிவிப்பு..!

Published By: J.G.Stephan

07 Aug, 2021 | 10:53 AM
image

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால் கையடக்கத்தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை, பாகிஸ்தான் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அதிரடி அறிவிப்பாக வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் இதுவரையில் 10,58,405 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 23,702 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 9,54,711 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் அங்கு தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருவதோடு, தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என்று பாகிஸ்தான் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும்,  தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால் கையடக்கத்தொலைபேசி இணைப்பு துண்டிப்பு, அலுவலகம் வர அனுமதி மறுப்பு, சம்பளம் கிடையாது, ஹோட்டல்கள்-வணிக வளாகங்களில் நுழைய அனுமதி இரத்து என அந்நாட்டு அரசாங்கம் அதிரடி அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளது.

இதனால் அந்நாட்டு மக்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

தடுப்பூசி முகாம்களில் மணிக்கணக்கில் காத்து நின்று அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52