(எம்.மனோசித்ரா)
கல்கமுவ பொலிஸ் பிரிவில் மஹனான்னேரிய பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து 10 வயது சிறுவன் உள்ளிட்ட மூவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது குறித்து பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறுகையில் ,
இன்று சனிக்கிழமை காலை கல்கமுவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கல்கமுவ பொலிஸ் பிரிவில் மஹனான்னேரிய பிரதேசத்திலுள்ள வீடொன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட போது , குறித்த வீட்டிலிருந்து 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த மூன்று சடலங்களில் ஒன்று 28 வயதுடைய திருமணமான பெண் ஒருவருடையதாகும். மற்றொரு சடலம் குறித்த பெண்ணுடைய 10 வயது மகனுடையது என்று தெரியவந்துள்ளது.
மற்றைய சடலம் குறித்த பெண்ணுடன் தகாத உறவைப் பேணியதாகக் கூறப்படும் 28 வயதுடைய அதே பிரதேசத்தைச் சேர்ந்த நபருடையதாகும்.
நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏதேனுமொரு சம்பவத்தில் குறித்த நபரால் அந்த வீட்டிலிருந்த பெண்ணும் அவருடைய மகனும் கொலை செய்யப்பட்டு , அவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார் என்று இதுவரையில் கிடைக்கப் பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெறும் சாட்சிகளுக்கமைய தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM