இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் தயாராகும் திரைப்படமான 'நதிகளிலே நீராடும் சூரியன்' என்ற படத்தின் தலைப்பு, 'வெந்து தணிந்தது காடு' என மாற்றப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் சிலம்பரசனும், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. இந்தப் படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் கதை, வசனம் எழுத, சித்தார்த்தா நூனி ஒளிப்பதிவு செய்ய, ஒஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது.

'வெந்து தணிந்தது காடு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் சிம்புவின் தோற்றத்தை முற்றிலும் மாற்றி அமைத்திருக்கிறார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். இதனால் இந்த ஃபர்ஸ்ட் லுக்கிற்கு எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரவேற்பு கிடைத்து வருகிறது.