ஊடகத்துறையில் ஆலவிருட்சம் போல் வேரூன்றியிருக்கும் வீரகேசரி இன்றையதினம் 91 வருடங்களை பூர்த்தி செய்து 92 ஆவது வருடத்தில் கால் பதிக்கின்றது.

இந்நிலையில், வீரகேசரிக்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள், கல்விமான்கள், நலன்விரும்பிகள் மற்றும் வாசகர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

நடுநிலையான ஊடக நெறியாள்கையே வீரகேசரியின் நீண்ட பயணத்தின் வெற்றி மக்கள் விடுதலை முன்னணி

நடுநிலையான ஊடக நெறியாக்கத்திற்கு அமைய செயற்படுவதன் காரணமாகவே வீரகேசரி பத்திரிகை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் 91 வருட காலமாக நிலைத்து நிற்கிறது. இன நல்லிணக்கத்துடன் செயற்படும் வீரகேசரி பத்திரிகை என்றும் நிலைத்து நிற்க வேண்டும் என மனதார வாழ்த்துவதாக மக்கள் விடுதலை முன்னணி தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளது.

அச்செய்தியில்ரூபவ் 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி உதயமான வீரகேசரி பத்திரிகை 91 ஆவது அகவையை கொண்டாடுகின் றது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கம் வகையில் தோற்றம் பெற்ற இப்பத்திரிகை மக்களின் உரிமை மற்றும் நியாயம் ஊடக மூலதர்மம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், நியாயத்திற்காகவும் முன்னிலையாகும் அரசியல் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி வீரகேசரி பத்திரிகையின் 91 ஆவது அகவைக்கு மனதார வாழ்த்து தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறது.

சமூக, அரசியல் மற்றும் பொரு ளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் 90 வருடகாலமாக ஒரு பத்திரிகை தொடர்ந்து நிலைத்து நிற்பது சவால்மிக்கது. நடுநிலையான பக்கச்சார்பற்ற ஊடக நெறியாக்கத்தினால் வீரகேசரி பத்திரிகை இச்சவாலை வெற்றிக் கொண்டுள்ளது என்பதற்கு பல விடயங்கள் சாட்சியளிக்கின்றன.

குறுகிய அரசியல் நோக்கங்களையுடைய அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கு அமைய செயற்படாமல், இனவாத கொள்கைகளின்றிய வகையில் இன நல்லிணக்கத்துடன் செயற்படும் வீரகேசரி பத்திரினை என்றும் நிலைத்து சேவையாற்ற வேண்டும் என வாழ்த்துகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.

அகவை 91 இல் அகல கால் பதிக்கிறது வீரகேசரி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்

இன்னுமொரு அகவையை இனிதே தாங்கி பணியது செழித்தோங்கும் பயணத்தில் வீரகேசரி அகவை 91இல் தடம் பதிக்கின்றமை தமிழ் பேசும் நெஞ்சங்களுக்கெல்லாம் ஒரு மகிழ்ச்சியான செய்தி.

தேசிய நாளிதழ் என்ற ரீதியில் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடு களிலும் சமூக பார்வையை பாரபட்சமின்றி பரவ விடுவதில் கேசரி முதன்மை பெறுகின்றது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழ் பேசும் சமூகங்களில் இதயக்குரலாக சுடர்விடும் வீரகேசரி நடுநிலையாக நின்று செய்திகளை தரும் அதேநேரம் சிறுபான்மை மக்களின் சமகால பிரச்சினைகளை உடனுக் குடன் தொட்டுக் காட்டி ஆவணை செய்யும் உந்துதலையும் தந்து வருகின்றமை குறிப்பிடத் தக்கது. பெருந்தோட்ட மக்களின் 1000 ரூபா சம்பளப் போராட்டம் உள்ளிட்ட சமூக தேவைகளுக்கு முக் கியத்துவம் கொடுத்து பொது ஜன அபிப்பிராயத்தை திரட்டித் தருவதில் கேசரி காத்திரமான பங்களிப்பை வழங்கி வருகின்றது.

அகவை 91 இல் அகல கால்வைக் கும் வீரகேசரி மேலும் வளர வாழ்த்தி பிரார்த்திக்கின்றேன் பெருமிதம் கொள்கிறேன்.

உண்மை, நேர்மை, வெளிப்படைத்தன்மையுடன் தொடர்ந்தும் வெற்றிநடை போட வேண்டும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் இன, மத, மொழி பேதமின்றி அரசியல் கலப்பின்றி ஒரு நடுநிலைப் பத்திரிகையாக வெளி வரும் வீரகேசரி தொடர்ந்தும் வெற்றிநடை போட வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக் னேஸ்வரன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

அச்செய்தியில், இலங்கைத் தீவில் கடந்த 90 ஆண்டு காலமாக செய்திகளையும், புதினங் களையும் மற்றும் அறிவுசார் ஆக்கங்களையும் தமிழில் வெளியிட்டு வருகின்ற வீரகேசரி நாளிதழ் தனது 91 ஆவது வருடத்தில் தடம் பதிக்கின்ற இந்த இனிய தருணத்தில் வீரகேசரியின் ஆக்க ங்களையும் அதன் நேர்மைத் தன்மையையும் வெளிப்படையாக செய்திகளை மக்களுக்கு வழங்கும் பாங்குகளையும் இச்சந்தர்ப்பத்தில் வாழ்த்திப் பாராட்டுவதில் மகிழ்வடைகின்றேன்.

இலங்கையில் பல்வேறு புதினப் பத்திரிகைகள் காலத்திற்குக் காலம் தோன்றி மறைந்த போதும் அல்லது நலிவடைந்த போதும் வீரகேசரி அன்று தொட்டு இன்று வரை அதன் தராதரத்தில், செய்திகளை வெளியிடும் உளப்பாங்கில் எவ்வித மாற்றமும் இன்றி அனைத்துச் செய்திகளையும் உடனுக்குடன் மக்கள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் திரட்டி வழங்கி வந்துள்ளது.

செய்திகளை ஆராய்ந்து விரைந்து வெளியிடுவதும் அல்லது மிகைப்படுத்தி வெளி யிடுவதும் பத்திரிகை களின் தற்போதைய செயற்பாடாக இருக்கும் இக்காலகட்டத்திலும் ஒவ்வொரு செய்தியையும் அதன் உண்மைத் தன்மை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே செய்தி யாக வெளியிடும் மனப்பாங்கு வீரகேசரிக்கே உரிய ஓர் உயரிய சிறப்பம்சமாகும்.

அரசியல் நெருக்கடிகளுக்கும் மற்றும் மொழி ரீதியான, இன ரீதியான நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வீரகேசரி தனது பணியில் சற்றும் தளர்ந்து விடாது சீரிய போக்கைக் கடைப்பிடித்து செய்திகளை வெளியிடுவது மக்களை வெகு வாகக் கவர்ந்துள்ளது. அதனால்தான் நாடு முழுவதிலும் உள்ள தமிழ்ப் பேசும் பிரதேசங் களில் வீரகேசரி வரவேற்கப்படும் ஒரு பத்திரி கையாகத் திகழ்கின்றது.

மேலும் பல பல ஆண்டுகள் சிறந்த பத்திரிகை யாக இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வெற்றி நடை போட எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன் என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குன்றாத இளமையுடன் வீறுநடை போடும் தமிழினத்தின் அடையாளம் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம்

தமிழ் பேசும் மக்களின் தனித்துவம் மிக்க பத்திரிகையாய் பல்வேறு அம்சங்களையும் சுமந்து வெளிவந்து கொண்டிருக்கும் “கேசரி” அதன் பெயருக்கு ஏற்றாற் போல “சிங்கநடை” பயின்று தொண்ணூறு அகவைகள் கடந்தும் குன்றாத இளமையுடன் தமிழினத்தின் அடையாளமாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அச்செய்தியில்ரூபவ் பழம்பெரும் பத்திரிகையான “கேசரி” அதன் 91 ஆவது அகவையில் தடம் பதிக்கும் நேரத்தில் வாழ்த்துச் செய்தி வழங்குவதில் பெருமையடைகிறேன். தொழில்நுட்ப வசதிகள் குறைவாக இருந்த காலகட்டத்தில் உருவாகி இன்று நவீன தொழில் நுட்ப வசதிகளை தன்னகத்தே கொண்டு மிடுக்கோடும் துணிச்சலோடும் நடுநிலை தவறாமல் ஊடக தர்மத்தை பேணிப் பாதுகாத்து வருகின்றது.

தமிழ் மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் அநீதிகள் ஏற்படும் போதெல்லாம் அந்த மக்களின் குரலாக ஒலிப்பதில் ரூடவ்டு இணையற்ற பத்திரிகை என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூயஅp;பித்து வந்துள்ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் மாத்திரமல்லாமல் நாட்டு மக்கள் அனைவரது பிரச்சினைகளையும் வெளிக்கொணர்ந்து அவற்றுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் மிகவும் முனைப்பாக செயற்பட்டு வருவதால் தமிழினத்தின் அடை யாளமாக வீரகேசரி விளங்குகின்றது.

மலையகரூபவ் இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு பிரஜாவுரிமை கிடைக்க வேண்டுமென உரிமைக் குரல் எழுப்பி அதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு வந்ததோடு, மலையக மக்கள் மத்தியில் அரசியல், பொருளாதாரம், கல்வி முதலான துறைகளில் எழுச்சியை யும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த தொடர்ந்து பாடுபட்டு வருகின்றது.

குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுரூபவ் தனி வீட்டுத் திட்டம் போன்றவற்றுக்கு பாரிய பங்களிப்பைச் செய்துள்ளது.

அநீதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ப திலும்ரூபவ் நாட்டில் அரசியலமைப்பு சீர்திருத்தம் செய்யப்படும் போது சிறுபான்மை மக்களுக்கு அநீதி ஏற்பட்டு விடக் கூடாது என்பதிலும் மிகவும் பொறுப்புடன் செயற்பட்டு வருவது போல, இலட்சக் கணக்கான மலையக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறது.

நல்லது நடக்கும் போது தட்டிக் கொடுப்பதும், தவறுகள் நடக்கும் போது தட்டிக் கேட்பதும் சமூகக் கடமை என்பதை உணர்த்தும் வகையில் அதன் சேவை மென்மேலும் தொடர வேண்டும் என்று வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நூற்றாண்டை நெருங்கும் தமிழ் மக்களின் குரல் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன்

மலையக சமூகத் திற்கு உறுதுணையாக இருந்த வீரகேசரி நூற்றாண்டை நெருங்குகின்றமை பெருமைய ளிக்கின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலை வரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுச்சாமி இராதாகிருஷ்ணன் தனது வாழ் த்துச் செய்தியில் தெரிவித்தார். அச்செய்தியில், இந்நாட்டுத் தமிழர்களின் குரலாய் கடந்த 91 வருடங்களாக ஒலித்து வரும் வீரகேசரி பத்திரிகை இன்று ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி தனது 92 ஆவது அகவையில் காலடி எடுத்து வைப்பதானது வீரத்தமிழுக்கே பெருமை சேர்க்கின்றது.

உலக வரை படத்தில் குட்டி நாடாக இருக்கும் எமது இலங்கையில் சுதந்திரத்துக்கு முன்பிரு ந்தே தொடர்ச்சியாக 9 தசாப்தங்கள் ஒரு தமிழ்ப்பத்திரிகை வெளிவந்து கொண்டிருப்பது முழு நாட்டிற்குமே பெருமை. பல்வேறு காலகட்டங்க ளில் எமது நாட்டில் தமிழர்களின் எழுச்சியை, போராட்டத்தை, துன்பங்களை, வீரத்தை உலக றியச்செய்த பெருமை வீரகேசரிக்கு உள்ளது. மலையக சமூகத்தின் அரசியல் பயணத்துக்கு உறுதுணையாக இருந்தது மட்டுமல்லாது இப்போது வரை கட்சி தொழிற்சங்க பேதமில்லாது; வழிநடத்தும் ஒரு மாபெரும் ஊடகப்பணியை வீரகேசரி செய்து வருகின்றது.

நவீன இலத்திரனியல் ஊடக தளத்தின் மத்தியில் தனித்துவமாக நின்று செய்தி தரும் பாரம்பரிய ஒரு ஊடகமாக இப்பத்திரிகை விளங்குகின்றது. சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் பரவி விட்ட இக்காலத்தில் சரியான செய்தி களை மறுநாள் வரை காத்திருந்து உறுதி செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். அதை எமக்கு செவ் வனே தருவது வீரகேசரி மாத்திரமே!. இன்னும் 9 ஆண்டுகளில் எமது வீரகேசரி நூற்றாண்டை காணப்போகின்றது. அத்தருணத்திற்காய் நாம் காத்திருக்கிறோம்.

வீரகேசரி நிறுவனத்தின் பணிப்பாளர் சபைரூபவ் முகாமைத்துவ இயக்குநர், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், பணியாளர் கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரி விக்கின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வாசகர்களின் இதயங்களை வென்ற முன்னோடித் தமிழ் நாளிதழ் த.ம.வி.பு. கட்சியின் தலைவர் சந்திரகாந்தன்

இலங்கை பத்திரிகை வரலாற்றில் நூற்றா ண்டை நோக்கிப் பயணிக்கும் வீரகேசரிப் பத்திரிகையின் வளர்ச்சி பாராட்டுக்குரியது. 90 வருடங்களை மிகவும் பயனுள்ளதாக மாற்றி வாசகர்களின் இதயங்களை வென்ற முன்னோடித் தமிழ் நாளிதழ் வீரகேசரி என்றால் அது மிகையாகாது.

இவ்வாறானதொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளிதழுக்கு வாழ்த்துரைப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் என்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவருடைய வாழ்த்துச் செய்தியில், இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னரே இலங்கைத் தமிழ் பேசும் மக்களுக்கான காத்திரமான ஓர் படைப்பாக வீரகேசரி பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இலங்கையில் வாழ்ந்த இந்தியத் தமிழர்கள் தொடர்பான செய்திகளையும் தலைநகர் கொழும்பை மையமாகக் கொண்ட செய்திகளையுமே வெளியிட்டு வந்தது. காலப் போக்கில் இது ஒரு தேசிய பத்திரிகையாக உருவெடுத்து தனியொரு வளர்ச்சிப் போக்கை எட்டியது எனலாம்.

நடுநிலையான பத்திரிகையானது மக்க ளோடு தொடர்புடைய நிகழ்வுகளையும் எண்ணங்களையும்ரூபவ் பிரச்சி னைகளையும் விளக்குவதற்கு உண்மையான தகவல்களை வெளியிட வேண்டும் என்பதே பத்திரிகை தர்மமாகும். இதில் சற்றும் தளர்வில்லாது காலங் காலமாக தனித்துவம் மிக்க நடுநிலை யான ஒரு பத்திரிகையாக வீரகேசரி வலம் வருவது மகிழ்சிக்குரியது. நவீன தொழிநுட்ப வளர்ச்சிப் போக்குக்கு ஏற்ப பல்துறை சார்ந்த ஓர் தரமான வெளியீடாக வீரகேசரி பத்திரிகை தனது பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இப்பயணத்தின் பங்குதாரர்கள் மற்றும் இப்பத்திரிகையுடன் பயணிக்கும் வாசகர்கள் மேலும் இதன் படைப்பாளிகள் என அனைவரினது முயற்சியுமே இவ் வெற்றியின் படிக்கல் ஆகும். எனவே மென்மேலும் இவ் பத்திரிகை வளர்ச்சி பெற்று எம் தமிழ் சமூகத்தின் மத்தியில் அழியா புகழோடு நிலைத்திருக்க வேண்டுமென வாழ்த்துகின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மைரூபவ் நேர்மை, வெளிப்படைத்தன்மையுடன் தொடர்ந்தும் வெற்றிநடை போட வேண்டும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் இன, மத, மொழி பேதமின்றி அரசியல் கலப்பின்றி ஒரு நடுநிலைப் பத்திரிகையாக வெளி வரும் வீரகேசரி தொடர்ந்தும் வெற்றிநடை போட வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாரா ளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக் னேஸ்வரன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

அச்செய்தியில், இலங்கைத் தீவில் கடந்த 90 ஆண்டு காலமாக செய்திகளையும், புதினங் களையும் மற்றும் அறிவுசார் ஆக்கங்களையும் தமிழில் வெளியிட்டு வருகின்ற வீரகேசரி நாளிதழ் தனது 91ஆவது வருடத்தில் தடம் பதிக்கின்ற இந்த இனிய தருணத்தில் வீரகேசரியின் ஆக்க ங்களையும் அதன் நேர்மைத் தன்மையையும் வெளிப்படையாக செய்திகளை மக்களுக்கு வழங்கும் பாங்குகளையும் இச்சந்தர்ப்பத்தில் வாழ்த்திப் பாராட்டுவதில் மகிழ்வடைகின்றேன்.

இலங்கையில் பல்வேறு புதினப் பத்திரிகைகள் காலத்திற்குக் காலம் தோன்றி மறைந்த போதும் அல்லது நலிவடைந்த போதும் வீரகேசரி அன்று தொட்டு இன்று வரை அதன் தராதரத்தில் செய்திகளை வெளியிடும் உளப்பாங்கில் எவ்வித மாற்றமும் இன்றி அனைத்துச் செய்திகளையும் உடனுக்குடன் மக்கள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் திரட்டி வழங்கி வந்துள்ளது.

செய்திகளை ஆராய் ந்து விரைந்து வெளியிடுவதும் அல்லது மிகைப்படுத்தி வெளி யிடுவதும் பத்திரிகை களின் தற்போதைய செயற்பாடாக இருக்கும் இக்காலகட்டத்திலும் ஒவ்வொரு செய்தியையும் அதன் உண்மைத் தன்மை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே செய்தி யாக வெளியிடும் மனப்பாங்கு வீரகேசரிக்கே உரிய ஓர் உயரிய சிறப்பம்சமாகும்.

அரசியல் நெருக்கடிகளுக்கும் மற்றும் மொழி ரீதியானரூபவ் இன ரீதியான நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வீரகேசரி தனது பணியில் சற்றும் தளர்ந்து விடாது சீரிய போக்கைக் கடைப்பிடித்து செய்திகளை வெளியிடுவது மக்களை வெகு வாகக்கவர்ந்துள்ளது. அதனால்;தான் நாடு

முழுவதிலும் உள்ள தமிழ்ப் பேசும் பிரதேசங் களில் வீரகேசரி வரவேற்கப்படும் ஒரு பத்திரி கையாகத் திகழ்கின்றது. மேலும் பல பல ஆண்டுகள் சிறந்த பத்திரிகை யாக இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வெற்றி நடை போட எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன் என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்போராட்டம் வெற்றிபெற வீரகேசரியின் பணி தொடர வேண்டும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

தமிழின விடுதலைப்போராட்டம் வெற்றியடை வதற்காக வீரகேசரியின் பணி தொடர வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலை வரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பின ருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற் றும் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ் மக்களது உரிமைப் போராட்ட வரலாற் றில் வீரகேசரிப் பத்திரிகையின் பங்கும் பணியும் என்றும் மறக்க முடியாதவை. வீரகேசரி பத்திரிகை தமிழ் மக்களின் உரிமைக்காகவும்ரூபவ் தமிழ் மக்கள் மீதான சிங்கள பௌத்த பேரின வாதத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்துள்ளது.

குறிப்பாகரூபவ் தமிழ்த் தேசத்தின் மீது சிங்கள தேசம் ஆக்கிரமிப்பு யுத்தத்தை கட்டவிழ்த்து விட்டிருந்த நிலையிலும், கொழும்பில் இருந்து வெளிவந்த துணிச்சல் நிறைந்ததொரு பத்திரி கையாகும். பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழர் தரப்பு நியாயங்களையும் உண் மைகளையும் வீரகேசரி வெளிப்படுத்தி பல கட்டுரைகளையும் பிரசுரித்திருந்தது.

இலங்கைத்தீவில் எமது இனம் தனது இருப்புக்கான நீண்ட நெடிய போராட்டத்தை,  செய்ய முடியாத விலைகொடுத்து நடாத்தியுள்ளது. தனது இலக்கை நோக்கி எமது இனம் இன்னமும் போராடிக் கொண்டேயிருக்கின்றது.

இந்த விடுதலைப் பயணம் வெற்றியடைய வேண்டுமானால், இந்தத் தீவை மையப்படுத்தி இடம்பெறும் பூகோள ஆதிக்கப்போட்டியும், இப்போட்டியில்ரூபவ் தமிழ் மக்களது நலன்களை அடைந்து கொள்வதற்கு தமிழ்த் தரப்பு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பிலும் மக்கள் அறிவூட்டப்பட்டுரூபவ் தெளிவூட்டப்பட்டுரூபவ் வழிகாட்டப்படல் வேண்டும். அவ்விடயத்தில் வீரகேசரி பத்திரிகை தனது பொறுப்பை உணர்ந்து கடந்த 90 ஆண்டுகளைப் போலவே எதிர்காலத்திலும் செயற்படும் என்று நம்புகின்றோம் என்றுள்ளது.

தமிழர்களின் இருப்புக்கு காத்திரமான பங்களிப்பை தொடர்ந்து ஆற்றிவருகிறது தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் முரளிதரன் வீரகேசரி தமிழர்களின் இருப்புக்கு காத்திரமான பங்களிப்பை தொடர்ந்தும் ஆற்றிவருகின்ற பாரம்பரிய பத்திரிகையாகும் என்று ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயக மூர்த்தி முரளிதரன்(கருணா) தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவருடைய வாழ்த்துச் செய்தியில், எனக்கு விபரம் தெரிந்த காலத்திலிருந்து எமது பெற்றோர்கள்ரூபவ் உறவினர்கள் வீரகேசரி பத்திரிகையை வாசிப்பதையே தொடர்ச்சியாக அவதானித்து வந்திருக்கின்றேன். அதன்பால் ஈர்க்கப்பட்ட நானும்ரூபவ் சிறுவயதிலிருந்தே இந்த பத்திரிகையை வாசிக்க ஆரம்பித்தேன். உள்நாட்டு விடயங்கள் முதல் உலகளாவிய விடயங்கள் வரையில் அனைத்தும் மிகவும் இலகு தமிழில் அழகாக அறிக்கையிடப்பட்டிருக்கும். அவை அனைத்தும் அறிவூட்டும் விடயங்களாகவே இருந்தன. பின்னர், விடுதலைப் போராட்டத்தில் நான் ஈடுபட்ட காலத்திலும், இந்தப் பத்திரிகை பல விடயங்களை நடு நிலையாக அறிக்கை யிட்டிருக்கும். குறிப் பாக போராட்ட செய்தி அறிக்கையிடலில் வீரகேசரி தனக்கென்ற தனித்துவத்தினைக் கொண்டிருந்தது.

போரின் பின்னரான காலத்திலும் அந்தப் பத்திரிகை தமிழ் மக்களின் அபிலாஷைகளுக் கான குரலாக இருந்துவருகின்றது. அத்தகைய பெரும்பணியாற்றும் வீரகேசரி இன்னும் பல நூறாண்டுகள் செழுமையுடன் பயணிக்க வேண்டும் என்பது எனது பேரவா. அதற்காக மனமார வாழ்த்துகின்றேன் என்றுள்ளது.