வீரகேசரிக்கு அரசியல்வாதிகள், கல்விமான்கள், நலன்விரும்பிகள் மற்றும் வாசகர்கள் வாழ்த்து!

Published By: Gayathri

06 Aug, 2021 | 03:27 PM
image

ஊடகத்துறையில் ஆலவிருட்சம் போல் வேரூன்றியிருக்கும் வீரகேசரி இன்றையதினம் 91 வருடங்களை பூர்த்தி செய்து 92 ஆவது வருடத்தில் கால் பதிக்கின்றது.

இந்நிலையில், வீரகேசரிக்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள், கல்விமான்கள், நலன்விரும்பிகள் மற்றும் வாசகர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

வீரகேசரி பத்திரிகை நீண்டகாலம் பயணிக்க மனதார வாழ்த்துகிறேன் -  வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல

நீண்ட வரலாற்றைக்கொண்டுள்ள வீரகேசரி பத்திரிகை வெற்றி நடையுடன் பயணிப்பதற்கு மிக முக்கிய காரணமாக அந்த பத்திரிகை வெளியிடும் அம்சங்களே காணப்படுகின்றன. இந்த விடயம் தொடர்பாக நான் மகிழ்ச்சி அடைவதுடன் அந்த பத்திரிகையின் நீண்டகால பயணத்துக்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில், வீரகேசரி பத்திரிகை என்பது நீண்டகால வரலாற்றைக் கொண்டிருக்கின்ற இந்த நாட்டின் வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த ஒரு பத்திரிகையாக இருந்துவருகிறது. 

1930ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வீரகேசரி பத்திரிகையானது இந்தளவு காலம் வெற்றி நடையுடன் பயணிக்கின்றது என்பதன் ஊடாகவே பத்திரிகை என்ற ரீதியில் அதன் வாசகர்களுக்கு தேவையானவற்றை சரியான முறையில் கொடுத்து வந்திருக்கின்றது என்பதற்கு ஒரு மிகப் பெரிய சான்றாக வெளிக்காட்டுகிறது.

எனவே ஊடகத்துறை அமைச்சர் என்ற வகையில் மிகவும் மகிழ்ச்சியுடன் அந்தப் பத்திரிகையின் உரிமை யாளர்கள், பணிப்பாளர்கள், அதன் ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் எனது மிகப்பெரிய வாழ்த்துக்களை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

அத்துடன் மிக முக்கியமாக இந்த பத்திரிகையை வாசிக்கின்ற வாசகர்களுக்கும் குறிப்பாக வடக்கு கிழக்கு உள்ளிட்ட இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தப் பத்திரிகை இந்தளவு காலம் வெற்றி நடையுடன் பயணிப்பதற்கு மிக முக்கிய காரணமாக அந்த பத்திரிகை வெளியிடும் அம்சங்களே காணப்படுகின்றன. இந்த விடயம் தொடர்பாக நாம் மகிழ்ச்சி அடைவதுடன் அந்த பத்திரிகையின் நீண்டகால பயணத்துக்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்திலும் ஊடகத்துறையில் பாரிய பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் - வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன

வீரகேசரிக்கு எதிர்காலத்திலும் ஊடகத்துறையில் பாரிய பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புக்கள் கிட்ட வேண்டுமென பிரார்த்திப்பதாக பாராளுமன்ற சபை முதல்வரும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவருடைய வாழ்த்துச் செய்தியில் மேலும்,

இலங்கையின் பழம்பெரும் தமிழ் பத்திரிகையான வீரகேசரிக்கு 2021 ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதியன்று அகவை 90 பூர்த்தியாவதை முன்னிட்டு அந்நிறுவனத்தின் தலைவர் ஹரி செல்வநாதன் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசன் உள்ளிட்ட பணிப்பாளர் சபைக்கும், பிரதம ஆசிரியர் தலைமையிலான ஆசிரியர் பீடத்தினருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி வீரகேசரி பத்திரிகை உதயமானதுடன், அது ஆரம்பத்தில் தோட்டத் தொழிலாளர் மக்களின் பிரதான குரலாக விளங்கியது. தற்போது எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனமானது வீரகேசரி நாளிதழ், வாரவெளியீடு ஆகிய வற்றுக்கு மேலதிகமாக மெட்ரோ நியூஸ்ரூபவ் டெய்லி எக்ஸ்பிரஸ்ரூபவ் மித்திரன், விடிவெள்ளி உள்ளிட்ட வெளியீடுகளை வழங்கும் நிறுவனமாக விளங்குவதுடன்,  இந்நாட்டின் தமிழ் பேசும் மக்களின் ஊடக மாக மாத்திரமன்றி அனைத்து மக்களினதும் ஊடக நிறுவனமாக தமது பணியினை விஸ்தரித்துக் கொண்டுள்ளது.

வீரகேசரி பத்திரிகைக்கு தொடர்ந்தும் ஊடகத்துறையில் பாரிய பொறுப்புக்களை நிறைவேற்ற வாய்ப்புக்கிட்ட வேண்டுமென பிரார்த்திக் கின்றேன் குறிப்பிட்டுள்ளார்.

வீரகேசரி தேசிய ரீதியில் முன்னேறிப்பயணித்துக் கொண்டிருக்கிறது - த.மு.கூ.வின் தலைவர் மனோகணேசன்

வீரகேசரி பரந்து விரிந்து தேசிய ரீதியில் முன்னேறிப் பயணித்துக்கொண்டிருக்கின்றது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலை வரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

அச்செய்தியில், வீரகேசரி இலங்கையில் தமிழ் பேசும், தமிழ் எழுதும் தமிழ் வாசிக்கும் மக்களின் கலை, கலாசார, பண்பாடு, கல்வி ஆகியவற்றின் அடையாளம். இந்த வரலாற்று ஊடகத்திலே தான் தமிழ் மக்களின் நிகழ்கால, எதிர்கால இலக்குகள் பற்றி விவாதிக்கப்படுகின்றன, எழுதப்படுகின்றன, பேசப்படுகின்றன. கருத்துக் கள் பரிமாற்றப்படுகின்றன.

ஊடக நிறுவனம் என்று சொல்லும்போது அதுநிறுவன த்தின் நிர்வாகிகளுக்கும் ஊடக பலகையிலே எழுதுகின்ற ஆசிரிய பீடத்திற்கும் அவற்றை அச்சுப்படுத்தி ஒழுங்குபடுத்தும் தொழில் நுட்பப் பிரிவினருக்கும் அவற்றை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விநியோகஸ் தர்களுக்கும் மாத்திரம் சொந்தமானதல்ல.

மாறாக அது வாசகர்களுக்கும் அதேபோல செய்தியாக்குனர்களுக்கும் சொந்தமென்றே கருதுகின்றேன். ஆகவே செய்தியாக்குனர் என்ற முறையிலே நானும் வீரகேசரி என்ற நெடும் பயணத்திலே அங்கம் வகிக்கின்றேன் என்று பெருமையுடன் கூறிக் கொள்கின்றேன். அதனால் உரிமையுடன் வீரகேசரியை வாழ் த்துகின்றேன்.

வீரகேசரி வெறுமனே அச்சு ஊடகமென்ற நிலையிலிருந்து வளர்ந்து இலத்திரனியல் ஊடகத்துக்குள்ளேயே நுழைந்து இணைய வெளியிலே தவழ்ந்து உயரத்திலே பறக்கக் கூடிய ஒரு பறவையாக விரிந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது.

வீரகேசரி தற்போதும் மலையகத்தை மறக்காமல் இந்திய வம்சாவளி மக்களையும் மறக்காமல் அவர்களையும் உள்ளே வைத்துக்கொண்டு முழு நாட்டிலும் வாழ்ந்துகொண்டிருக் கக்கூடிய அனைத்து தமிழர்களையும் தமிழ்பேசும் மக்களையும் உள்வாங்கி ஒரு தேசியப்பயணமாக முன்னேறிச் சென்றுக்கொண்டிருக் கின்றது.

அத்துடன் வீரகேசரி பல வெளியீடுகளை அச்சு ரீதியாகவும் இலத்திரனியல் ரீதியாகவும் வெளியிட்டுக்கொண்டிருக்கின்றது.

எனது நண்பர் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசனின் வழிகாட்டலிலும் ஏனைய பணிப்பாளர்களின் ஒத்துழைப்புடனும் தேசிய ரீதியான சிந்தனை கொண்ட ஆசிரியபீடம், விநியோக பீடம், தொழில்நுட்பப்பீடம் ஆகிய அனைத்தையும் சார்ந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியதில் வீரகேசரிக்கு என்றுமே தனியான இடமுண்டு - மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம்

நாட்டில் அச்சு ஊடகத் துறையில் கடந்த ஒன்பது தசாப்தங்களாக காலப் போக்கிற்கு ஏற்ப புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியதில் ‘வீரசேகரி’க்கு தனியான இடமுண்டு என்றால் மிகையாகாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்ரூபவ் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

அந்த வாழ்த்துச் செய்தியில், இலங்கையில் ‘வீரசேகரி’ நாளிதழ் வெற்றிகரமாக 92 ஆவது ஆண்டில் பிரவேசிப்பதையிட்டு, இளமைக் காலம் தொட்டு அதன் அபிமான வாசகர்களில் ஒருவன் என்ற முறையில் அக மகிழ்கின்றேன். உள்நாட்டுச் செய்தி களையும் வெளிநாட்டுச் செய்திகளையும் உடனுக்குடன் சுடச்சுட வழங்குவதில் இதன் பங்களிப்பு மகத்தானது.

இலங்கையில் மட்டுமல்லாது, தமிழகத் திலும், மலேஷியாவிலும், சிங்கப்பூரிலும் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் உலகின் பல்வேறு நாடுகளிலும் வீரகேசரி வாசகர் நெஞ்சங்களில் நீங்காத இடத்தைப் பெற்றுத் திகழ்கின்றது.

செய்திகளுக்கு அப்பால் அரசியல் கட்டுரை களையும் இலக்கியப் படைப்புக்களையும் மற் றும் பல்சுவை அம்சங்களையும் தன்னகத்தே கொண்டதாக ‘வீரகேசரி’ வெற்றிப் பாதையில் தொடர்ந்தும் வீறுநடைபோடுகின்றது.

ஆசிரிய தலையங்கங்களை பொறுத்தவரை ஆணித் தரமான கருத்துக்களை ‘வீரகேசரி’ முன்வைத்து வருவது குறிப்பிடத்தக் கது. செய்திகளு க்குப் பொருத்தமான தலைப்புக் களை யிடுவதோடு, வாசகர்களை கவர் ந்திழுக்கும் வண்ணம் செய்திகளையும் ஏனைய தகவல்களையும் சுற்றிவளைக்காமல், கச்சிதமாக ‘வீரகேசரி’ வழங்கி வருகின் றது.

இந்த மகிழ்ச்சிகரமான சந்தர்ப்பத்தில் இதன் அதீத வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய முன்னாள் ஆசிரியர்களையும் ஆசிரியர் குழாத்தினரையும் ஏனைய ஊழியர்களையும் நன்றியறிதலோடு நினைவுக் கூரக் கடமைப்பட்டுள்ளோம்.

‘வீரகேசரி’ நாளிதழ் மற்றும் வார இதழ் ஆகியவற்றுக்கு தற்பொழுது தங்களது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்துக் கொண்டிருக்கும் நிர்வாகிகளுக்கும் பிரதம ஆசிரியருக்கும் ஆசிரிய பீடத்தினருக்கும் பணிக் குழு வினருக்கும் நாடளாவிய ரீதியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் செய்தியாளர்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் வாசகர் பெரு மக்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் மனமுவந்த வாழ்த்துக்களைத் தெரிவி த்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் பேசும் மக்களின் குரலாய் தொடர்ந்து ஒலிக்க வேண்டும் அ.இ.ம.கா.வின் பதில் தலைவர் என்.எம். சஹீத்

தமிழ் பேசும் மக்களின் இதயங்களிலும் ஆழமான இடத்தை பிடித் துள்ள வீரகேசரி தமிழ் பேசும் மக்களின் குரலாய் தொடர்ந்து ஒலி க்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சிரேஷ்ட உப தலைவரும் தற்போதைய பதில் தலைவரு மான சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீத் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்தியில் இலங்கையின் முன்னணி தமிழ் தேசிய ஊடகமாக விளங்கும் வீரகேசரி பத்திரிகை ஊடக சேவையில் 91 வருடங்களை பூர்த்தி செய்து 92ஆவது ஆண் டில் காலடி எடுத்து வைப்பதை வாழ்த்துவதில் அ.இ.ம.கா. மகிழ்ச்சியடைகிறது.

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பதா கவே தனது ஊடக பணியை ஆரம்பித்த வீரகேசரி பல்வேறு அரசியல் பொருளாதார ரீதியிலான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து தமிழ் பேசும் மக்களின் உரிமை குரலாக செயற்படுகிறது.

அதேநேரம் இன்று மிக முக்கிய தேவையாக உள்ள தமிழ் பேசும் சமூகங்களிடையேயான ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ நிலைமையை உருவாக்கவும் வீரகேசரி ஒரு உறவுப் பாலமாக செயற்படும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து பல்லாண்டு கால ஊடக சேவையில், வெற்றியுடன் நடைபோட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மனதார வாழ்த்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய கருத்துருவாக்கங்களில் வீரகேசரியின் பங்கு காத்திரமானது - ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ்

இலங்கைத் தமிழ் ஊடகப் பரப்பில் மூத்த பத்திரிகைகளில் ஒன்றாக விளங்கிவரும் வீரகேசரி முக்கிய கருத்துருவாக்கங்களில் காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ளது என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும்ரூபவ் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அச்செய்தியில் மேலும் இலங்கைத் தமிழ் ஊடகப் பரப்பில் மூத்த பத்திரிகைகளில் ஒன்றாக விளங்கி வருகின்ற வீரகேசரி 91 ஆவது ஆண்டில் தன்னுடைய பயணத்தை ஆரம்பிப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.

தமிழ் பேசுகின்ற மக்கள் மத்தியில் ஏற்பட்ட அரசியல் ரீதியான கருத்துருவாக்கங்களிலும் சமூக ரீதியான மாற்றங்களிலும் வீரகேசரியின் பங்கு கடந்த காலங்களில் காத்திரமானதாக இருந்திருக்கின்றது.

ஆனால், கடந்த காலங்களில் எதிர்கொண்ட அவலங்களில் இருந்து எமது மக்களைப் பாதுகாப்பதற்கு தமிழ் ஊடகங்கள் இன்னும் அதிகமாக உழைத்திருக்கலாமோ என்ற ஆழமான எண்ணம் எனக்குண்டு.

எனினும், கடந்த 90 ஆண்டுகளில் செயற்பட்டதைப் போன்று அடுத்து வரும் காலங்களிலும் அதன் பணி அமைய வேண்டும். அத்துடன் எதிர்காலத்தில் மக்களுக்கான நடைமுறைச் சாத்தியமான சரியான வழியை மக்களுக்கு காட்டும் வகையில் வீரகேசரி ஊடகம் செயற்படும் என்ற நம்பிக்கையுடன் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அனைத்து சமூகங்களுக்குமான முன்னணி செய்தி வழங்குனராக வீரகேசரி ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க கொந்தளிப்பான வரலாறுகள் இருந்தபோதி லும் இலங்கையின் ஊடக துறையில் இன்றும் முன்னணியில் உள்ள வீரகேசரி பத்திரிகை தற்போது தமிழ் பேசும் சமூகத்திற்கு மாத்திரமல்லாது நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களுக்குமான முன்னணி செய்தி வழங்குனராக உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்து செய்தியில், வீரகேசரி பத்திரிகை தனது 90 வருட பூர்த்தி விழாவை கொண்டாடுகின்றது. இந்த இன்பகரமான தருணத்தில் வீரகேசரி பத்திரிகைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை கூறிக் கொள்கின்றேன். நாட்டின் முன்னணி தமிழ் பத்திரிகையான வீரகேசரி அதன் வரலாறு முழுவதும் ஊடக தர்மம் மற்றும் ஒருமைப்பாட்டை உயர் மட்டத்தில் பின்பற்றி வருகிறது.

1930 ஆம் ஆண்டில் பி.பி.ஆர்.சுப்பிரமணியம் அவர்களால் வீரகேசரி பத்திரிகை நிறுவப்பட்டது. இலங்கை வாழ் அனைத்து இன மக்களுக்கான நீதி மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் வீரகேசரி பத்திரிகை கொள்கைகள் அமைந்துள்ளன. சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியிலும் ஊடக வழிக்காட்டல்களில் வீரகேசரி முன்னின்று செயற்பட்டுள்ளது.

கொந்தளிப்பான வரலாறுகள் இருந்த போதிலும், வீரகேசரி பத்தி ரிகை இலங்கையின் ஊடக துறையில் இன் றும் முன்னணியில் உள்ளது.

அந்த வகையில் இன்று 91ஆவது அகவையில் காலடியெடுத்து வைத்துள்ள வீரகேசரி பத்திரிகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அதன் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன் அவர்களுக்கும் வாழ்த்துக்களை கூறிக்கொள்கின்றேன்.

மேலும் கே.ஆர். ரவீந்திரன், ஞானம் குடும்பத்தார், வென்செலோஸ் குடும்பத்தார், சௌந்தரராஜன் குடும்பத்தார் மற்றும் செல்வநாதன் குடும்பத்தினருக்கும் இந்த சாதனைக்காக வாழ்த்துக்களை கூறிக் கொள்கின்றேன்.

வீரகேசரி பத்திரிகையின் தற்போதைய ஆசிரியர் மற்றும் ஆசிரிய பீடத்தினர், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை கூறிக் கொள்வதுடன் எதிர்கால முயற்சிகள் சிறக்கவும் வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதிகள் போல் செயற்படுவதை எதிர்க்கட்சிகள் தவிர்க்க...

2024-06-13 16:54:47
news-image

கிராம உத்தியோகத்தர்களின் புதிய சேவை யாப்புக்கு...

2024-06-13 20:54:34
news-image

நாளை 2 மணிக்குள் சாதகமான பதிலின்றேல்...

2024-06-13 17:35:08
news-image

நுவரெலியாவில் உடலின் கீழ் பகுதி இல்லாமல்...

2024-06-13 20:19:38
news-image

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய...

2024-06-13 19:53:18
news-image

இரு முச்சக்கர வண்டிகள் நேருக்குநேர் மோதி...

2024-06-13 19:07:27
news-image

அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த...

2024-06-13 17:36:34
news-image

மன்னாரிலும் தபால் தொழிற்சங்கத்தினர் சுகயீன போராட்டம்

2024-06-13 17:34:27
news-image

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி...

2024-06-13 17:33:18
news-image

தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை நாட்டிற்கு...

2024-06-13 17:27:50
news-image

மற்றுமொரு ரயில் தடம் புரள்வு ;...

2024-06-13 17:13:01
news-image

யாழில் தேசிய மக்கள் சக்தியினரால் துண்டுப்...

2024-06-13 17:02:22