கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 10 இலட்சம் பெறுமதியான சிகரட் பக்கட்டுகளுடன்  28 வயதான இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று (07) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து  27600 சிகரட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த நபர் டுபாயிலிருந்து  ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான  UL - 226 விமானத்தில் இலங்கை  வந்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டவருக்கு 1 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.