வீரகேசரி தனித்துவ ஊடக சேவையின் வகிபாகத்தை சித்தரிக்கிறது - எதிர்க்கட்சித்தலைவர் சஜித் 

06 Aug, 2021 | 06:01 AM
image

ஒரு சிறந்த மற்றும் தனித்துவமான ஊடக சேவையின் வகிபாக பாத்திரத்தை சித்தரிக்கும் வீரகேசரியின் பயணத்தையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

அச்செய்தியில், இலங்கையின் 90 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இலங்கையின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான வீரகேசரிக்கு எங்கள் இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வீரகேசரி இலங்கையின் பழைமையான தமிழ் பத்திரிகை என்று போற்றப்படுவதோடு மிக முக்கியமான தேசிய பத்திரிகை ஒன்று என்பதை மிகைப்படுத்தாமல் விவரிக்க முடியும். 

ஒன்பது தசாப்தங்களுக்கும் மேலாக வாசகரின் ஆர்வத்தைத் தக்கவைத்து, புதிய பரிமானங்களுக்கு முகம் கொடுத்து வீரகேசரி தனது பயணத்தைப் பற்றி நிறைய பாராட்டத்தக்க அபிமானங்களைக் கொண்டுள்ளது.

இந்நாட்டில் அச்சு இதழின் ஆரம்ப சகாப்தத்தில் தொடங்கி, பல்வேறு மாற்றங்களையும் சவால்களையும் எதிர்கொண்டு, இன்று இணைய உலகின் சவால்களையும் எதிர்கொள்வதற்கான ஆற்றலையும் வீரகேசரி கொண்டு ஒரு வெற்றிகரமான பயணத்தில் தடம் பதித்துள்ளது.

வீரகேசரி தனது அயராத தன்மை, தைரியமாக, ஜனரஞ்சகமாக மக்களுக்கான பத்திரிகையாக இருப்பதன் காரணமாகவே நாட்டின் முன்னணி தமிழ் பத்திரிகையாக புகழ் பெற்றுள்ளது என்று கூறலாம்.

வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்களுக்காக எத்தனை பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் உருவாக்கப்பட்டாலும் அவற்றின் இருப்பு வாசகர்கள் சமூகத்தாலயே தீர்மானிக்கப்படுகிறது. 

ஆனால் வீரகேசரி பத்திரிகைக்கு இது ஒரு சவாலாக இல்லை. ஏனென்றால் வாசகர்கள் அவர்களுடன் உறுதியாக இருக்கின்றனர்.

வீரகேசரி பல சந்தர்ப்பங்களில் விருதுகளை வென்றுள்ளது. அதேபோல் வீரகேசரி மக்கள் சார்பாக ஜனரஞ்சகமாக, தைரியமாக மற்றும் உண்மையாக அறிக்கை இட்டமையால் பல சவால்களை எதிர்கொண்ட நேரங்களையும் நான் நினைவில் கொள்கிறேன்.

வீரகேசரியின் ஊடகவியலாளர்கள் பலருக்கு உயிராபத்துகள் மற்றும் உயிர் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.அத்துடன் வீரகேசரியால் பல சவால்களை எதிர்கொண்டு தனது ஊடகப் பொறுப்புகளை நிறைவேற்ற முடிந்துள்ளது. 

91 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் இந்த சிறப்பான சந்தர்ப்பத்தில் வீரகேசரி பெற்ற சாதனைகள், பாராட்டுக்களை மகிழ்வுடன் நினைவு கூர்வார்கள் என்பதுடன் அவர்கள் சந்தித்த சவால்களையும் மீட்டுவார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.

மேலும் வீரகேசரி பத்திரிகையின் அர்ப்பணிப்பு மிக்க நிர்வாகத் துறைசார்ந்தவர்களை, பிரதம தலைமை ஆசிரியர் முதல் பிரதேச நிருபர்கள் வரை சகலரையும் பெரும் மரியாதையுடன் நினைவு கூருகிறோம்.

மகத்தான ஊடக செயற்பாட்டிற்காக வீரகேசரியின் ஒட்டுமொத்த ஊழியர்களுக்கும் இந்த உயரிய பணியை காலம் முழுவதும் மேற்கொள்ளுவதற்கான தைரியம் மற்றும் உறுதி கிடைக்கப் பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right