சமூகத்தின் குரலான வீரகேசரி எப்போதும் ஊடக தர்மத்தினை பேணி வருகின்றது - பிரதமர் மஹிந்த

06 Aug, 2021 | 05:43 AM
image

சமூகத்தின் குரலாக, நடுநிலையாக செயற்படும் வீரகேசரி எப்போதும் ஊடக தர்மத்தினை பேணி வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொது ஜனபெரமுனவின் தலைவரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவருடைய வாழ்த்துச் செய்தியில்,

91 ஆவது அகவையை கொண்டாடும் வீரகேசரிக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் நான் அக மகிழ்வு அடைகின்றேன்.

இலங்கையின் ஊடக அரங்கில் நீண்ட வரலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்டுள்ள வீரகேசரியானது 9 தசாப்தங்களை கடந்து நூற்றாண்டை நோக்கி பயணிக்கும் இந்த வேளையில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் நான் பெருமையடைகின்றேன்.

இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் வாழ்வோடு இரண்டறக்கலந்து விட்ட பத்திரிகையாக வீரகேசரி திகழ்கின்றது. கடின உழைப்பால் மக்களின் குரலாக தொன்றுதொட்டு வீரகேசரி விளங்கிவருகின்றது.

ஜனநாயகத்தில் ஊடகத்திற்கு மிக முக்கிய பங்கு உண்டு. ஜனாநாயகத்தின் 4 ஆவது தூணின் அங்கம் என்ற வகையில் சமூகத்தின் குரலாய் உழைத்த வீரகேசரி பத்திரிகையானது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இன, மத ரீதியான வேறுபாடின்றி வீரகேசரியானது தனது ஊடகப் பணியை செய்து வருகின்றது. அனைத்து சமூகங்களும் வாழும் இத்திருநாட்டில் நடு நிலையான ஊடக தர்மத்தை வீரகேசரி எப்போதும் பேணி வருகின்றமை பாராட்டதக்க விடயமாகும்.

இலங்கையின் வரலாற்றில் அச்சு ஊடகத்தின் முன்னோடியாகவிருந்து பங்களிப்பு செய்துவருகின்றமைக்காக வீரகேசரிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து மகிழ்கின்றேன்.

90 வருடங்களுக்கு மேலாக ஆலவிருட்சமாக வளர்ந்து கிளைகளை பரப்பியுள்ள வீரகேசரியானது மேன்மேலும் நூற்றாண்டுகளை காண வேண்டும் என்று வாழ்த்துகின்றேன் என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40