‘வீரகேசரி’ நடுநிலை தவறாது சகல சமூகங்களையும் அரவணைத்துரூபவ் நாட்டில் நல்லிணக் கத்தை உருவாக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, வீரகேசரி பத்திரிகையானது, 91 வருடங்களாக அபிவிருத்தி, இன நல்லிணக்கம் மற்றும் சமூக நலன் என்பவற்றை நோக்கிய விவேகமான கொள்கையைத் தொடர்ச்சியாகப் பேணி வருகின்றது.

ஒரு தேசிய பத்திரிகையாக, ‘வீரகேசரி’ தரமான வழியில் தெளிவான தகவலை வெளியிடுவதை தனது குறிக்கோளாகக் கொண்டு தொடர்ந்து பணியாற்றி வருவது பாராட்டத்தக்கதாகும்.

ஒரு நாட்டின் நான்காவது அதிகாரத் தூணாகக் கருதப்படும் ஊடகத்துறை, சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் செயற்பட வேண்டியது இன்றியமையாததாக உள்ளது. அந்த வகையில், நடுநிலை தவறாது சகல சமூகங்களையும் அரவணைத்து, நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் ‘வீரகேசரி’ செயற்பட்டு வருவதானது, ஊடகப் பணிக்காக அர்ப்பணிப்புடன் செற்பட்டுவரும் ஊடகவியலா ளர்களின் பொறுப்பை நினைவூட்டுகின்றது.

சிறந்ததோர் சமூகத்தின் முன்னோக்கிய பயணத்துக்குரூபவ் நடுநிலையான மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்தகைய அர்த்தமுள்ள விமர்சனங்களுக்கான வாய்ப்புகளை, மிகவும் நியாயமான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே ஓர் அரசாங்கத்தின் எதிர் பார்ப்பாகும். அதற்காக, ‘வீரகேசரி’ பத்திரிகை பொறுப்புடன் மேற்கொண்டு வரும் முயற்சியை நான் பாராட்டுகின்றேன்.

‘வீரகேசரி’, இலங்கையின் பழம்பெரும் தமிழ்ப் பத்திரிகையாகச் சேவையாற்றி, தனது 91ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடுகின்ற இவ்வேளையில், தமிழ்ப் பேசும் சமூகத்தின் நல்வாழ்வுடன், இன நல்லிணக்கத்தை வலுப் படுத்தும் கண்ணோட்டத்துடன் தொடர்ந்தும் செயற்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

வீரகேசரி பத்திரிகையின் எதிர்காலப் பயணம் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.