அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த மொனிக்கா றிலே 700 இறாத்தல் நிறையுடையவர்.

இவர் உலகிலேயே பருமனான பெண்ணாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிக்கும் முகமாக தினசரி 8,000 கலோரி சக்திப் பெறுமானமுடைய உணவை உட்கொண்டு வருகிறார். 

போர்ட் வோர்த் நகரைச் சேர்ந்த மொனிக்கா றிலே (27 வயது) தனது நிறையை 1,000 இறாத்தலாக அதிகரிப்பதே தனது இலட்சியம் என கூறுகிறார். 

அசைய முடியாத நிலையிலுள்ள அவருக்கு உணவை நேரத்துக்கு நேரம் வழங்கி அவரது இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கு அவரது காதலரான சிட் றிலே (25 வயது) உதவி வருகிறார். 

மேற்படி ஜோடி திருமணம் செய்யாத நிலையில் இணைந்து வாழ்கின்ற போதும் மொனிக்கா சிட் றிலேயின் பெயரை தனது பெயருடன் இணைத்துக் கொண்டுள்ளார். 

தனது காதலர் தனக்கு 3,500 கலோரி சக்திப் பெறுமானமுடைய கிறீம் கலவை உணவை வழங்குவதை தான் மிகவும் விரும்புவதாக மொனிக்கா தெரிவித்தார். 

1,000 இறாத்தல் நிறையை அடையும் வரை உண்பதை நிறுத்தப் போவதில்லை என அவர் கூறுகிறார். 

220 இறாத்தல் நிறையுடைய சிட், 91 சுற்றளவைக் கொண்ட மொனிக்காவின் இராட்சத வயிறுக்கு போதுமான உணவை சமைத்து வழங்குவதில் ஈடுபட்டு வருகிறார்.

மொனிக்கா தினசரி 6 சோஸேஜ் உணவு, ஒரு பெரிய பாத்திரத்தில் இனிப்பான சீரியல் உணவு, 4 கோழி இறைச்சி சான்ட்விச் உணவுகள், பொரியல்கள், 30 வாட்டப்பட்ட கோழி இறைச்சி துண்டுகள், பாற்கட்டி மற்றும் ஒரு கலன் ஐஸ்கிறீம் உள்ளடங்கலான உணவுகளை உண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.