உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட 62 பேரையும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கடந்த 10 மாதத்திற்கு பின்னர் இன்று வியாழக்கிழமை (05) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.
இதன்போது இவர்கள் நீதிமன்றில் நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த 21.4.2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர், ஸஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் காத்தான்குடியைச் சேர்ந்த 63 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 5 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டு, அவர்களில் இருவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 56 பேர் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்
இந்த 56 பேருடன் குண்டுதாக்குதல் தொடர்பாக வெவ்வேறு 4 வழக்கு இலக்கங்களை கொண்ட ஸஹ்ரானின் சகோதரி, அவரின் கணவர், சியோன் தேவாலய தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட ஆசாத்தின் தாயார் மற்றும் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்கள் 6 உட்பட 62 பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த வெவ்வேறு 4 வழக்கு இலக்கங்களைக் கொண்ட 62 பேரும் நாட்டிலுள்ள பொலன்னறுவை, அனுதாரபுரம், கேகாலை, திருகோணமலை போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை கடந்த 2020.10.15 ஆம் திகதி நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட பின்னர் நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக இவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்படாது காணொளி மூலம் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தொடர்ந்து விளக்கமறியில் வைக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 10 மாதத்திற்கு பின்னர் இன்று வியாழக்கிழமை (05) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் 7 பஸ்வண்டிகளில் அழைத்துவரப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை குறித்த சந்தேகநபர்களை பார்வையிடுவதற்காக அவர்களது உறவினர்கள் நீதிமன்றத்தின் வெளியில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM