ஆரம்ப சுகாதார சேவைகளை விருத்தி செய்ய நடவடிக்கை - சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே

Published By: Digital Desk 4

05 Aug, 2021 | 04:49 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் தொற்று நிலையில் பாரிய சேவையை மேற்கொள்ளும் சுவசெரிய சேவையை மேலும் விருத்தியடைச்செய்ய வேண்டும்.

அதற்காக மேலும் 212 அம்பியூலன்ஸ்  வண்டிகள் தேவைப்படுகின்றன. அத்துடன் மேலும் பல தேவைகளுக்காக 11,843,700.000 மில்லியன் ரூபாவுக்கான அனுமதியை பாராளுமன்றத்தில் கோரி இருக்கின்றோம் என ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

பாராமன்றத்தில் இன்று ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சுக்கு 11,843,700.000 மில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே  இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட் தொற்று ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் தொற்றாளர்களை வைத்தியசாலைக்கும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் கொண்டுசெல்ல பாரிய பங்களிப்பு செய்தது 1990 சுகசெரிய அம்பியூளன்ஸ் சேவையும் எமது அமைச்சுக்கு கீழே இருக்கின்றது.

தற்போது சுவசெரிய அம்பியூலன்ஸ்கள் 297 இருக்கின்றன. நாட்டின் தற்போதைய நிலையில் இது போதுமானதாக இல்லை. அதனால் மேலும் 212 அம்பியூலன்ஸ்கள் தேவைப்படுகின்றன. அதில் 60 அம்பியூலன்ஸ்களை ஜனாதிபதி கொவிட் நிதியத்தில் இருந்து பெற்றுக்கொள்வதற்காக அனுமதி கிடைக்கப்பெற்றிருக்கின்றது.  

அதனால் கொவிட் தொற்று பரவி வரும் நிலையில் அதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு எமது ராஜாங்க அமைச்சுக்கு ஒதுக்கீடுகள் தேவைப்படுகின்றன.

அதனால்தான் குறைநிரப்பு பிரேரணையாக ஒருகோடியே 18இலட்சத்தி 43ஆயிரத்தி 700  ரூபாவுக்கான அனுமதியை பாராளுமன்றத்தில் கோரி இருக்கின்றோம் என்றார். இதேவேளை, விவாதத்தின் இறுதியில் பாராளுமன்றத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46