பங்களாதேஷில் மின்னல் தாக்கியதில் திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்ட குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மணமகன் உட்பட மேலும் 14 பேர் இந்த அனர்த்தத்தில் காயமடைந்துள்ளனர்.

ஆற்றங்கரை நகரமான ஷிப்கஞ்சில் ஒரு படகில் இருந்து இறங்கிய மணமகன் உள்ளிட்ட குழுவினர், மணமகள் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தபோது இந்த அனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

பல மின்னல்கள் இந்த குழுவை தாக்கியதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும், தெற்காசியா முழுவதும் நூற்றுக்கணக்கான மக்கள் மின்னலால் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழக்கின்றனர்.