உடலுறவில் ஈடுபட கூடாது : உலக சுகாதார மையம் எச்சரிக்கை

07 Sep, 2016 | 01:52 PM
image

ஸிகா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வருபவர்கள் 6 மாதத்துக்கு உடலுறவில் ஈடுப்படகூடாது என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் 60 நாடுகளில் ஸிகா வைரஸ் தாக்கப்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் 8 வாரத்துக்கு ஆணுறை பயன்படுத்தி தான் உடலுறவில் ஈடுப்பட வேண்டும் என்று உலக சுகாதார மையம் எச்சரித்தது. 

இந்நிலையில் இத்தாலியை சேர்ந்த ஒருவர் ஸிகா வைரஸ் நோய் பாதித்த பகுதியில் இருந்து வந்திருக்கிறார். அவருடைய உயிரணுவில் 6 மாதத்துக்கு பிறகும் ஸிகா வைரஸ் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து ஸிகா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வருபவர்கள் 6 மாதத்துக்கு உடலுறவில் ஈடுப்பட கூடாது என்று உலக சுகாதார மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right