கடந்த ஆண்டு பெய்ரூட் துறைமுக வெடிப்புக்கு பொறுப்புக்கூறக் கோரி கோபமடைந்த ஆர்ப்பாட்டக்கார்களுக்கும் லெபனான் காவல்துறையினருக்கும் இடையில் புதன்கிழமை கைலப்பு இடம்பெற்றுள்ளது.

மத்திய பெய்ரூட்டில் பாராளுமன்றம் அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களைக் கொண்டு காவல்துறையினரை தாக்கி, முக்கிய கட்டிடத்தை முற்றுகையிட முயன்றனர்.

அதிரடிப்படையினர் கண்ணீர் புகை, தண்ணீர் பீரங்கி மற்றும் தடியடி கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பதிலடி கொடுத்துள்ளனர்.

இந்த வன்முறையால் காயமடைந்த ஆறு பேர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், மேலும் டஜன் கணக்கானவர்களுக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டதாக செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.

பெய்ரூட் துறைமுகத்திற்கு அருகில், சில நூறு மீற்றர் தொலைவில், குறைந்தது 218 பேர் கொல்லப்பட்ட மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்த வெடிப்பின் முதல் ஆண்டு (2020.08.04) நிறைவை அனுஷ்டிக்க ஆயிரக்கணக்கானோர் கூடினர்.

லெபனான் தேசிய துக்க தினத்தை முன்னிட்டு வங்கிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் புதன்கிழமை மூடப்பட்டன.

இதனிடையே காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மேற்கண்ட வன்முறை வெடித்துள்ளது.