(எம்.மனோசித்ரா)
தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் இன்று வியாழக்கிழமை காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 123 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இது வரையில் 53,266 பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 50,000 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவை தவிர மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் வாகனங்கள் பிரவேசிக்கின்ற 13 இடங்களில் 3,265 வாகனங்களும் அவற்றில் பயணித்த பயணித்த 6,589 நபர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
இதன் போது மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி மேல் மாகாணத்திலிருந்து வெளியேற அல்லது மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட 53 வாகனங்களில் பயணித்த 96 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு சட்டத்திற்கமையவும் , தண்டனை சட்டக்கோவையிலுள்ள ஏற்பாடுகளுக்கு அமையவரும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு 6 மாத சிறை தண்டனை அல்லது 10,000 தண்டப்பணம் அல்லது இந்த இரு தண்டனைகளையும் வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு காணப்படுகிறது என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM