உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 கோடியை கடந்துள்ளதாக ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் 3 கோடியே 50 இலட்சம்  நோயாளர்களுடன் அமெரிக்கா முதலிடத்திலுள்ளது.

3 கோடியே 10 இலட்சம் நோயாளர்களுடன்  இந்திய இரண்டாம் இடத்திலும், 1 கோடியே 90 இலட்சம் நோயாளர்களுடன் பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளில்  தற்போது தொற்றாளர்களினின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் மிகவும் வேகமாகப் பரவக் கூடியதென அறியப்பட்டுள்ளது.

இதேவேளை, உலகளாவிய ரீதியில் 40 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா  தடுப்பூசி, வைரஸ் தொற்றுக்குள்ளாகுவதையும், மற்றவர்களுக்கு பரவுவதையும், கடுமையான நோய் அல்லது கொரோனா உயிரிழப்பையும் தடுக்க உதவுகிறது.

ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின் படி,  கொரோனாவால் குறைந்தது 42 இலட்சத்து 50  உயிரிழப்புகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.