கைதாகியுள்ள ஆசிரியர்களின் நிலமைகளை பார்வையிடச்சென்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுமதி மறுப்பு..!

By J.G.Stephan

05 Aug, 2021 | 11:15 AM
image

ஆசிரியர்கள் அதிபர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு  சம்பந்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு, தன்னிச்சையாக கைது செய்யப்பட்ட  ஆசிரியர்களின் நிலமைகளை இன்று(05.08.2021) பார்வையிடுவதற்காக சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு உள்நுழைவதற்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.தன்னிச்சையாக கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை எதிர்க்கட்சித் தலைவருக்கே பார்க்க அனுமதி இல்லை எனும்போது,  இது என்ன வகையான  ஜனநாயகம்?என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், ஒரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டத்தரணிகளுக்கே பொலிஸ் நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்காவிட்டால், நாட்டில்  என்ன  ஜனநாயகம் உள்ளது என சந்தேகம் எழுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை வெளியிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right