டோக்கியோ ஒலிம்பிக்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்கள் 110 மீற்றர் தடை தாண்டல் இறுதிப் போட்டியில் ஜமைக்காவின் ஹான்ஸ்லே பார்ச்மென்ட் தங்கம் வென்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் உலக சாம்பியனான அமெரிக்காவின் கிராண்ட் ஹாலோவே தோற்கடித்தார் பார்ச்மென்ட்.

ஹோலோவே 13.09 வினாடிகளில் இலக்கினை நிறைவு செய்து வெள்ளிப் பதக்கம் பெற்றார், மற்றொரு ஜமைக்காவைச் சேர்ந்த  வீரரான ரொனால்ட் லெவி 13.10 வினாடிகளில் இலக்கினை நிறைவுசெய்து வெண்கலம் வென்றார்.

பார்ச்மென்ட் முன்னதாக 2012 ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இந் நிலையில் தற்சமயம் தனது இலக்கினை 13.04 வினாடிகளில் நிறைவுசெய்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.