நாட்டை முடக்குவதற்கான தீர்மானங்கள் எடுக்கப்படக்கூடும் - காரணத்தை கூறுகிறார் ஹேமந்த ஹேரத் 

Published By: Digital Desk 4

05 Aug, 2021 | 06:18 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது நாளாந்தம் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது.

நிலைமை தொடர்பில் ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வைரஸ் பரவல் பாரதூரமான நிலைமையை அடைந்தால் மாற்றுவழியாக முடக்கத்திற்கான தீர்மானங்கள் எடுக்கப்படக் கூடும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இந்தியாவைப் போன்று அபாயம் மிக்க நிலைமை இல்லை - வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்  | Virakesari.lk

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் புதன்கிழமை (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

நாட்டில் தற்போதுள்ள கொவிட் நிலைமை தொடர்பில் ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது முடக்கங்கள் இன்றி பொருளாதாரம் சார் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

எவ்வாறிருப்பினும் நிலைமையை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படும் போது மாற்று வழியாக முடக்கம் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படக் கூடும்.

தொற்றாளர்களின் சடுதியான எண்ணிக்கை அதிகரிப்பினால் வைத்தியசாலைகளில் அவசரநிலை ஏற்பட்டால் , அதற்கான முன்னேற்பாடுகளும் தயார்படுத்தல்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவைப் போன்று வாகனங்களிலிருந்து கொண்டு சிகிச்சை பெறும் நிலைமை ஏற்படாமல் தவிர்ப்பதற்கு நாம் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சுகாதார தரப்பிற்கு இதனை தனித்து கட்டுப்படுத்த முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

3 கோடி ரூபா பெறுமதியான போதைமாத்திரைகளை...

2024-04-14 12:51:19
news-image

யாழ் நகரின் சுகாதார நிலைமைகள் தொடர்பில்...

2024-04-14 12:21:07
news-image

வடக்கு, வடமேல் மாகாணங்களிலும் கொழும்பு, ஹம்பகா,...

2024-04-14 07:01:00
news-image

காலியிலிருந்து சுற்றுலா சென்றவர்களின் வேன் பண்டாரவளையில்...

2024-04-13 20:07:33
news-image

மருத்துநீர் வழங்கும் நிகழ்வு !

2024-04-13 19:55:36
news-image

மட்டக்களப்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...

2024-04-13 19:50:47
news-image

இன்று பிறக்கிறது குரோதி புதுவருடம் ! 

2024-04-13 15:44:56
news-image

உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட சந்தை...

2024-04-13 15:32:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக...

2024-04-13 15:33:20
news-image

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா சிறையிலிருந்த 10...

2024-04-13 15:28:49
news-image

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் வாள்கள், பொல்லுகளுடன்...

2024-04-13 15:09:06
news-image

இன்றைய வானிலை

2024-04-13 06:21:24