சட்டவேலி ஓட்டத்தில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்த மெக்லோலின் 

Published By: Digital Desk 4

04 Aug, 2021 | 08:45 PM
image

டொக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் 12ஆம் நாளான இன்று டோக்கியோ விளையாட்டரங்கில் நடைபெற்ற பெண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் சிட்னி மெக்லோலின் தனது சொந்த உலக சாதனையைப் புதுப்பித்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 51.46 செக்கன்களில் நிறைவுசெய்த மெக்லோலின், 2 மாதங்களுக்கு முன்னர் ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற திறன்காண் போட்டியில் நிலைநாட்டிய தனது சொந்த உலக சாதனையை (51.90 செக்.) முறியடித்து புதிய உலக சாதனையைப் படைத்தார்.

நடப்பு ஒலிம்பிக் சம்பியன் என்ற பட்டத்துன் இப் போட்டியில் பங்குபற்றிய மற்றொரு அமெரிக்கரான 31 வயதுடைய டிலைலா முஹம்மத், 51.58 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

நெதர்லாந்து வீராங்கனை ஃபெம்கே பொல் (52.03 செக்.) வென்கலப் பதக்கத்தை வென்றார்.

ஐந்து விராங்கனைகள் தத்தமது அதி சிறந்த தனிப்பட்ட நேரப் பெறுதிகளுடன் பங்குபற்றிய இப் போட்டியில் மெக்லோலின் மிக இலகுவாக வெற்றிபெற்று உலக சாதனையைப் படைத்தார்.

இது இவ்வாறிருக்க இந்த வருட ஒலிம்பிக் விளையாட்டு விழாவின்போது இரு பாலாருக்குமான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டிகளில் உலக சாதனைகள் அடுத்தடுத்த தினங்களில் நிலைநாட்டப்பட்டமை விசேட அம்சமாகும்.

ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் நோர்வேயைச் சேர்ந்த கார்ஸ்டென் வோர்ஹோம், முழு மெய்வல்லுநர் உலககையே பிரமிக்கச் செய்யும் வகையில் நேற்றைய தினம் மிகக் குறைந்த நேரத்தைப் பதிவுசெய்து உலக சாதனை நிலைநாட்டியிருந்தார்.

வோர்ஹோமும் தனது சொந்த உலக சாதனையையே முறியடித்து புதிய உலக சாதனை நிலைநாட்டியிருந்தார்.

400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை நிறைவு செய்வதற்கு வோர்ஹோம் எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 45.94 செக்கன்களாகும். அவரது முன்னைய உலக சாதனையை விட இது 0.79 செக்கன் குறைவாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20