(பாராளுமன்ற செய்தியாளர்)

உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளுக்கு குறிப்பிட்ட திகதியை நிர்ணயிக்க நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பிறகு உடன்பாடு எட்டப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபத்திரன தெரிவித்தார்.

2020 இன் முதல் 15 நாட்களில் பெண்களுக்கு எதிராக கடுமையான பாலியல்  வன்கொடுமைகள் பதிவு: சிறுவர் மீதான வன்கொடுமைத் தடுப்பு அமைப்பு | Virakesari .lk

குறிப்பிட்ட தினத்தில் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்காகவும், அந்த வழக்குகளை அடையாளம்காணும் முறையை வகுப்பதற்காகவும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை இலக்கம் 449 இன் அடிப்படையில் ஜூன் மாதம் 28ஆம் திகதியன்று அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அச்சபையின் தலைவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டத்தில் கலந்துக்கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுவர்களை நீதிமன்றத்திற்கு வரவழைக்காமல் பிற தொலைதூர இடங்களில் தொடர்புடைய ஆதாரங்களை வழங்க ஒவ்வொரு மாகாணத்திலும் ஒன்பது நிகழ்நிலை வடிவிலான பதிவு மையங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது என்றார். மேலும், மேற்கண்ட இடங்களில் நேரடி சாட்சிப்பதிவு மையங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதன் தலைவர் இக்குழுவுக்கு மேலும் தெரிவித்தார்.