(எம்.மனோசித்ரா)

சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிமன்றம் உரிய தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கின்றோம். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு குற்றமழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Virakesari on Twitter: "இதுதான் எனது கடைசி தேர்தல் - இராதாகிருஷ்ணன்  https://t.co/TT1hFujyYW #radhakrishna #TamilProgressiveAlliance #Virakesari…  https://t.co/bTJ1uHA1S9"

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

ஹிஷாலினியின் மரணம் மலையக மக்கள் மத்தியில் சிறுவர்களை வேலைக்கமர்த்துவது தொடர்பில் யதார்த்தத்தை உணர வைத்துள்ளது. நாடளாவிய ரீதியில் மாணவர்களின் பாடசாலை இடை விலகல் 7 வீதமாகக் காணப்படுகிறது. பெருந்தோட்டப்பகுதிகளின் அடிப்படையில் அவதானிக்கும் போது மாணவர்கள் இடை விலகல் 19 வீதமாகக் காணப்படுகிறது. இந்த நிலைமை மாற்றமடைய வேண்டும். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கின்றோம். குற்றவாளிகள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும், என்றார்.