(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் திறைசேரிக்கு சொந்தமான 50 வீத பங்குகளில் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை உண்மையே, ஆனால் இது நாட்டின் முழுமையான மின் உற்பத்தி அதிகாரத்தை அமெரிக்காவிற்கு கொடுக்கும் எந்த நோக்கமுமல்ல என சூரிய சக்தி, காற்று, நீர் மின் உற்பத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை, 27/2இன் கீழ் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக, கெரவலபிட்டிய மின் நிலையம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தினூடாக எரிவாயு மற்றும் மின்சார உற்பத்தி என்பவற்றை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்மானம் கேள்வி மனுக்கோரலுக்கு அப்பாற்பட்ட ஒன்றல்ல. அமெரிக்க நிறுவனத்தின் வேலைத்திட்டம் வேறு ஒன்றாகும். ஆகவே சந்தேகங்களை கொண்டு குழப்பமடைய வேண்டிய அவசியம் இல்லை. எமது வளங்களை வேறு நாடுகளுக்கு கொடுக்கும் நடவடிக்கை அல்ல இது. முறையாக கேள்விமனுக்கோரலுக்கு அமையவும் சட்ட முறைமைகளுக்கு அமையவுமே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான இருதரப்பு உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அதனை சபையில் சமர்பிக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM