தன்னிச்சையாக செயற்பட்டால் சர்வதேசத்தில் நேரடி அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும்: எதிர்க்கட்சி எச்சரிக்கை..!

Published By: J.G.Stephan

04 Aug, 2021 | 05:41 PM
image

(எம்.மனோசித்ரா)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இவ்விடயத்தில்  தன்னிச்சையாக செயற்பட முற்பட்டால் நாடு என்ற ரீதியில் சர்வதேச மட்டத்தில் நேரடியான அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தி எச்சரித்துள்ளது.

எனவே, செப்டெம்பரில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் இப்போதிலிருந்தே அரசாங்கம் அவதானத்தை செலுத்தி உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாயின், ஓரளவேனும் அதன் மூலம் ஏற்படக் கூடிய பிரச்சினைகளை குறைத்துக் கொள்ள முடியும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில்  கலந்து கொண்டு ஐக்கிய மக்கள்  சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹசிம் இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச மட்டத்தில் இலங்கை  மீதான  நற்பெயர் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை நீக்கப்பட்டாலும் நீக்கப்படாவிட்டாலும் எவ்வித சிக்கலும் இல்லை என்று சிலர் கூறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சர்வதேசத்திடமிருந்து கிடைக்கக் கூடிய சகல சலுகைகளையும் பெற்றுக் கொள்வதற்கே நாம் முயற்சிக்க வேண்டும். எனினும் தற்போதைய அரசாங்கம் எமக்குள்ள சலுகைகளையும் இல்லாமலாக்கிக் கொண்டிருக்கிறது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16