யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக இன்றைய தினம் மதியம் அமைதி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

முக்கிய சில அம்சங்களை முன்னிலைப்படுத்தியே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இலவச கல்வித்துறையை பாதுகாக்கவும், விரிவுபடுத்தவும், கல்வித்துறையில் இராணுவ தலையீடுகளை தடுக்க வேண்டியும் , கல்வியை தனியார் மயப்படுத்தல் , கல்வி நடவடிக்கையில் அரச தலையீடுகள் என்பவற்றை நிறுத்த கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.