(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி செயலக வளாகத்தில் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 16 பெண்கள் உள்ளடங்களாக 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் விசேட பொலிஸ் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு பிரதான வீதி முடங்கும் வகையில் செயற்பட வேண்டாம் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் , அதனை மீறி செயற்பட்டமையால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு 10 வாகனங்களும் பொலிஸாரின் பொறுப்பிலெடுக்கப்பட்டுள்ளன.
சட்ட விரோத மக்கள் ஒன்று கூடலில் கலந்து கொண்டமை, பிரதான வீதியை முடக்கியமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கமைய இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM