சமூக வலைத்தளங்கள் தொடர்பான அறிக்கையை அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க தீர்மானம்

Published By: J.G.Stephan

04 Aug, 2021 | 04:38 PM
image

(எம்.மனோசித்ரா)
சமூக வலைத்தளங்கள் தொடர்பான அறிக்கையினை அடுத்தவாரமளவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம். அதனையடுத்து அவற்றில் வெளியிடப்படும் செய்திகள் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ,' சிறுமி ஹிஷாலினியின் விவகாரம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெவ்வேறு கருத்துக்கள் வெளியிடப்படுகின்றமை' தொடர்பில் வினவப்பட்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

சம்பவமொன்று தொடர்பில் வழக்கு தொடரப்பட்ட பின்னர் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து கருத்துக்களை அல்லது நிலைப்பாடுகளை தெரிவிப்பதிலிருந்து விலகியிருக்க வேண்டும். ஆனால் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் சகலருக்கும் பிரச்சினைகள் காணப்படுகின்றன.

எனவே தான் இது தொடர்பில் நீதி அமைச்சு மற்றும் ஊடக அமைச்சுக்குமிடையில் நீண்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த வாரம் அல்லது இரு வாரங்களுக்குள் இது தொடர்பான அறிக்கையை நாம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.

சமூக வலைத்தளங்கள்  ஊடாக  சில சந்தர்ப்பங்களில் சிலருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50